Friday, February 26, 2021

தமிழகம்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் – சத்யபிரதா சாகு

தலைமைச் செயலகத்தில் இன்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அளித்த சிறப்பு பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழக தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடைமுறைக்கு அமுல்படுத்தப்படும். சட்டப்பேரவை நடத்த...

அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம்

சென்னையில் கட்டப்பட்டுள்ள அம்மா அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் ஜெயலலிதாவுடன் நேரடியாக பேசுவது போன்ற தொழில்நுட்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக அமைக்கப்பட்ட தனி அரங்கில் நாம் பட்டனை அழுத்தி கேட்கும் கேள்விகளுக்கு ஜெயலலிதா நேரடியாக பதில் சொல்வது போல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நேரத்தில் கிரண்பேடியை மாற்றியிருப்பது கண் துடைப்பு நாடகம் – மு.க. ஸ்டாலின்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மாற்றம் காலதாமதமான நடவடிக்கை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனநாயகத்தையும் சீர்குலைத்து, கேலிப் பொருள்களாக்கிய, அதிகார மோகம் கொண்ட ஒரு துணை நிலை ஆளுநரை இவ்வளவு நாள் பதவியில் வைத்திருந்ததே மிகப்பெரிய தவறு எனக் கூறியுள்ளார். தேர்தலுக்கு 3 மாதங்கள் இருக்கின்ற நேரத்தில் மாற்றியிருப்பது கண்துடைப்பு கபட நாடகம் எனக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், மக்களை ஏமாற்றக் கடைசி நேர நடவடிக்கை எனவும் சாடியுள்ளார். கிரண்பேடியை வைத்து பாஜக செய்த தரம் தாழ்ந்த அரசியலையும், அம்மாநிலத்தின் முன்னேற்றத்தைப் பாழ்படுத்திய மிக மோசமான செயலையும் மக்கள் ஒரு போதும் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இலங்கை

இலங்கை தமிழர் உரிமைகளை உறுதிபடுத்த மீண்டும் வலியுறுத்தியது இந்தியா

இலங்கைக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவை புதன்கிழமை சந்தித்துப் பேசினார். பிறகு இரு நாட்டு அமைச்சர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். இலங்கை தமிழர்களுக்கான நீதி, சமத்துவம், கௌரவம் ஆகியவற்றை உள்ளடக்கிய தீர்வு அவர்களுக்கு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டுக்கொண்டார்.

வெள்ளத்தில் மூழ்கியுள்ள மட்டக்களப்பு மாவட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. கல்முனை - மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன. இவ்வாறு வீதிகளில் காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகிறது. மேலும், பொதுமக்களின் குடிசைகளிலும்,வீடுகளிலும், காணிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதுடன் வெள்ள அனர்த்தம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பாதிக்கப்பட்டவர்களின் இடங்களையும், பிரதேசங்களையும் பார்வையிட்டு வருகின்றார்கள்.

இலங்கையில் திறமைக்கு இடமில்லை, இனத்திற்கே முக்கியத்துவம் – நாடாளுமன்ற உறுப்பினர் இராதாகிருஷ்ணன்

தமிழ் நாட்டில் சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞன் இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு சாதிக்கின்றான், ஆனால் எங்களுடைய இலங்கையில் 2 கோடி மக்களில் ஒருவரைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பு இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன் கவலை வெளியிட்டதுடன், இதுதான் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இருக்கின்ற வித்தியாசமாகுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஊடக அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது: இந்தியாவில் 100 கோடி பேரில் ஒரு தமிழன் நடராஜன் தெரிவு செய்யப்படுகின்றான். ஆனால் இலங்கையில் 2 கோடியில் ஒரு தமிழனைத் தெரிவு செய்ய முடியாமல் உள்ளது கவலைக்குரியது. இங்கு திறமைக்கு இடமில்லை இனத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக அனைவரும் பேசுகின்ற ஒரு விஷயம் தான் தமிழ்நாட்டு சேலம் சின்னப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தமிழன் நடராஜன் பற்றியது. அவன் ஒரு தமிழனாக இந்திய கிரிக்கட் அணியில் தெரிவு செய்யப்பட்டு தன்னுடைய திறமையைச்...

சினிமா

அஷ்வத் மாரிமுத்து டைரக்‌ஷனில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் "ஓ மை கடவுளே". ஆக்சிஸ் பிலிம் பேக்டரி நிறுவனம் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. கடந்த பிப்ரவரி 14-ம் தேதி இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் படம் வெளியாகும் முன்பே, தெலுங்கு ரீமேக் உரிமையை பிவிபி சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியது. தற்போது அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் விஸ்வாக் சென் நடிக்க படத்தின் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தி ரீமேக்கும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எண்டமால் சைன் இந்தியா, மெர்ரி கோ ரவுண்ட் ஸ்டுடியோஸ் மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. "ஓ மை கடவுளே" இந்தி ரீமேக்கையும் அஷ்வத் மாரிமுத்துவே டைரக்ட் செய்ய...

ஆரி நடிக்கும் புதிய படம்

பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி புதிய படமொன்றில் நடிக்கிறார். பெயரிடப்படாத அந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

கொரோனா விதிமுறைகளை மீறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்கு

துபாயில் இருந்து வந்து கொரோனா தடுப்பு வழிமுறைகளை பாதுகாக்கத் தவறியதாக பாலிவுட் நடிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  நடிகர்கள் அர்பாஸ் கான், சோகையில் கான் மற்றும் அவரது மகன் நிர்வான் கான் ஆகியோர் கடந்த மாதம் 25ம் தேதி குவைத்தில் இருந்து மும்பை திரும்பினர். ஆனால் அதன் பின்னர் சுய தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட கொரோனா தடுப்புக்கான எந்த ஒரு நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும் ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் நிராகரித்து வீடுகளுக்குச் சென்றதாகத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

திருநள்ளாறு சனிபகவான் கோவிலில் கொரோனா கட்டுப்பாட்டு அறை – கவர்னர் கிரண்பேடி

புதுச்சேரி புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுவை அரசு, கொரோனா தொற்றிலிருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதற்காக கொரோனா போர் அறையின் மூலம் செயல் திட்டங்கள் தீட்டப்பட்டது. இந்த செயல் திட்டங்களை தற்போது காரைக்காலில் நடைமுறைப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக நிவாரணம் மற்றும் மறுவாழ்வு துறை செயலர் அன்பரசு தலைமையிலான அதிகாரிகள் காரைக்காலில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் விவாதத்தில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் காரைக்கால் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவும், நோய் தொற்று குறைந்த பகுதியாகவும் கருத்தில் கொள்ளப்பட்டு உள்ளது. திருநள்ளாறு சனிபகவான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை அதிகரிப்பதை கருத்தில் கொண்டு தொற்று பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளை இன்னும் அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா பரிசோதனையை 500-ல் இருந்து 1000 ஆக உயர்த்திடவும், அதனை தனியார் மருத்துவக்கல்லூரி ஒத்துழைப்புடன் செய்திடவும் முடிவு செய்யப்பட்டது. அங்கு 24 மணி நேரமும்...

திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறை ரத்து

புதுச்சேரி திருநள்ளாறு கோவிலில் ஆன்லைன் முன்பதிவு தரிசன முறையை ரத்து செய்வது குறித்து ஆலோசனை நடத்துவதாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறினார். கடந்தாண்டு சனிப்பெயர்ச்சியின் போது 1.5 லட்சம் பேர் தரிசித்த நிலையில் இந்தாண்டு 12,000 பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்துள்ளனர் என கூறினார். வருவாய் குறைந்தாலும், பக்தர்கள் சிரமத்தை கருத்தில் கொண்டும் ஆன்லைன் முன்பதிவை ரத்து செய்ய ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்

சபரிமலையில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு – ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 220ஆக உயர்ந்துள்ளது. அங்கு சமீபத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையில், ஒரே நாளில் 18 போலீசார் உள்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஓட்டல்களில் வேலை செய்து வந்த 7 பேருக்கும் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதனை அடுத்து சபரிமலையில் இதுவரை 220-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக அதிர்ச்சி அடைந்துள்ள தேவஸ்தான நிர்வாகம் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டது.

வர்த்தகம்

இன்றைய தங்கத்தின் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 குறைந்து ரூ.36,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.9 குறைந்து ரூ.4,528-க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம்

இன்ஸ்டாகிராமில் புதிய Update அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்கும் வகையில் நீக்கிய பதிவுகளுக்கென்று தனியாக பிரிவு (Recently Deleted) என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் இருந்து நீங்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் 3 நாளில் ரூ 1.4 லட்சம் கோடி இழப்பு

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள், புதன்கிழமை வர்த்தகத்தில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்ததை அடுத்துச் சென்செக்ஸ் குறியீட்டில் தொடர்ந்து 2வது நாளாக மிகவும் மோசமான சரிவை எதிர்கொண்ட நிறுவனமாக உருவெடுத்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகளின் சரிவைக் கண்டு அதிர்ச்சியில் இருக்கும் முதலீட்டாளர்களுக்குச் சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது. இந்தத் தொடர் சரிவின் காரணமாக முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் மதிப்பு கடந்த 3 நாட்களில் சுமார் 1.4 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து 4 வர்த்தக நாட்களாகச் சரிவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச முதலீட்டு வங்கியான Macquarie நிறுவனத்தின் ஆதித்யா சுரேஷ் மற்றும் அபிநில் தஹிவாலே ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் சரிவு பாதையின் துவக்கம் தான், இதை...

இந்தியா

வரும் தேர்தலில் வாக்குசீட்டு முறையை அமுல்படுத்த வேண்டும் – என்.ஏ.கோன்

சமதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் என்.ஏ.கோன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எதிர்வரும் தேர்தலில் புதுச்சேரியில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சி அமைக்கும். தமிழ்நாட்டில் பி.ஜே.பி பல சட்டமன்ற உறுப்பினர்களை பெறுவார்கள். ஏனென்றால் EVM மெஷின் பி.ஜே.பி யின் சொல்படி கேட்கும். EVM மெஷின் வேண்டாம், வாக்குச்சீட்டு வேண்டும் என்று எந்த எதிர்க்கட்சியும் வலியுறுத்தவில்லை. இந்த மௌனம் எமக்கு புரியவில்லை. இந்த தேர்தலில் அடி வாங்கிய பின்னர்தான் எதிர்க்கட்சியினர் புரிந்து கொள்வார்களா? இன்னும் எதுவும் கடந்து போகவில்லை, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாக்குசீட்டு வேண்டும் என்று முறையிடலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு தயாராகவில்லை என்பதுதான் வருத்தத்திற்குரியது. இதன் விளைவுகள் தேர்தலுக்கு பின் தெரியும். இந்தியாவில், மம்தா பேனெர்ஜி மற்றும் உத்தவ் தாக்கரே மட்டுமே இதற்காக குரல் கொடுக்கிறார்கள். வாக்குசீட்டு முறைதான் மக்களுக்கு உத்திரவாதமானது என்பதை சமதா கட்சி வலியுறுத்துகிறது.

பெட்ரோல் டீசல் மீதான கூடுதல் வரிமூலம் 20 லட்சம் கோடி மத்திய அரசு வசூலித்துள்ளது – காங்கிரஸ் குற்றச்சாட்டு.

பா.ஜ.க ஆட்சிக்கு வந்தது முதல் கடந்த ஆறரை ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீது கூடுதலாக விதிக்கப்பட்ட கலால் வரி மூலம் 20 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு வசூலித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த மோடி வரியைக் குறைத்தால் பெட்ரோல் விலை 62 ரூபாயாகவும், டீசல் விலை 47 ரூபாயாக குறையும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இதன் மூலம் உயர்ந்து வரும் விலைவாசியும் பெருமளவுக்குக் குறையும் என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன்கேரா தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 108 டாலருக்கு விற்கப்பட்டது. அப்போது பெட்ரோல் விலை 71 ரூபாய் 51 காசுகளாகவும், டீசல் விலை 57 ரூபாய் 28 காசுகளாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். தற்போது, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 56 டாலராக இருக்கும் போது பேட்ரோல் விலை நூறு ரூபாயை நெறுங்கிவிட்டதாகக்...

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 11,067 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,08,58,371-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,55,252-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,05,61,608-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 11,067 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,087 பேர் குணமடைந்துள்ளதாகவும், 94 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

உலகம்

அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் செவ்வாய் கிரகத்தை அடைந்தது

அரபு அமீரகத்தின் HOPE விண்கலம் 7 மாத பயணத்திற்கு பிறகு செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது. இந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறப்பு ஆய்வு கருவிகள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேலடுக்கில் உள்ள காலநிலை, பனி மேகங்கள் ஆகியவை ஆய்வு செய்யப்பட உள்ளது.

மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சி

ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மியான்மரில் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தலில் ஆங் சான் சூகி கட்சி பெரும்பான்மை பெற்றது.ராணுவத்தின் ஆதரவுபெற்ற கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்திற்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார்.

தவறுக்கு பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்த மங்கோலிய பிரமதர் உக்னகின் குரேல்சுக்.

மங்கோலியா நாட்டில், புதிதாக குழந்தை பெற்றெடுத்த தாய் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதனால் குழந்தையோடு தனிமைப்படுத்தும் அறைக்கு அந்த தாய் மாற்றப்படும் வீடியோ ஒன்று சமீபத்தில் அந்தநாட்டு மக்களிடம் வேகமாகப் பரவியது. அந்த வீடியோ மூலம், கடுமையான குளிரின்போது, வெறும் மருத்துவமனை உடையையும், சாதாரணமான ஸ்லிப்பரையும் அணிந்த நிலையில் அந்த தாயார், தனிமைப்படுத்தும் அறைக்கு மாற்றப்படுவது தெரியவந்தது. குழந்தை பெற்ற பெண்ணுக்கு, குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள எந்த வசதியும் வழங்கப்படாமல் வேறு அறைக்கு மாற்றப்படுவது அந்நாட்டு மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைக் கண்டித்து மங்கோலிய மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இந்தப் போராட்டம், கொரோனா தொற்று பரவும் சூழ்நிலையை மங்கோலிய அரசு கையாண்ட விதத்தைக் கண்டிக்கும் விதமாக மாறியது. இதனைத் தொடர்ந்து, குழந்தை பெற்ற பெண்ணைக் கையாண்ட விதம் தவறு என்றும், அதற்கு பொறுப்பெடுத்துக் கொள்ளவதாகவும் கூறி, மங்கோலிய பிரதமர் உக்னகின் குரேல்சுக் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விளையாட்டு

கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தல்

சென்னை ஆஸ்திரேலியாவில் இருந்து சேலம் வரும் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளதால் கிரிக்கெட் வீரர் நடராஜனை தனிமைப்படுத்திக் கொள்ள அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நடராஜனுக்கு வரவேற்பு அளிக்க ஊர் மக்கள் திட்டமிட்ட நிலையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி – சுந்தர், தாக்கூர் அரைசதம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 336 ரன்களில் ஆல்அவுட் ஆனது. சிட்னி டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியை விட 33 ரக்னள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது. 6 விக்கெட்களை இழந்து தடுமாறிக்கொண்டிருந்த நிலையில் அணியை சுந்தரும், தாக்கூரும் சரிவில் இருந்து மீட்டனர். அறிமுக போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய தமிழக வீரர் வாஷிங்கடன் சுந்தர் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். இந்திய அணியை சரிவிலிருந்து மீட்ட ஷர்துல் தாக்கூர் 67 ரன்னிலும், வாஷிங்டன் சுந்தர் 62 ரன்னிலும் ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன் சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் பேட்டியில் இந்தியா அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர் பிரித்வி ஷா ரன் எதுவும் எடுக்காமலும், மயங்க் அகர்வால் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் ஆட்டமிழந்தனர். 3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். புஜாரா 43 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 188 ஆக இருந்த போது விராட் கோலி 74 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். அடுத்த 19 ரன்னுக்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. சகா மற்றும் அஸ்வின் நிலைத்து நின்ற நிலையில், இந்தியா அணி முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்களை சேர்த்துள்ளது.

பொது

பெண்களிடம் ஆபாசமாக கேள்வி கேட்டு பேட்டி – யூடியூப் சேனலைச் சேர்ந்த 3 பேர் கைது

சில யூடியூப் சேனல்கள் "மக்கள் கருத்து" என்ற பெயரில் பொது இடங்களில் மக்களிடம் கேள்வி கேட்டு, அதை வைரல் வீடியோவாக்கி வருகின்றனர். வைரலாக வேண்டும் என்பதற்காக சில கேள்விகள் தரம் தாழ்ந்தும் செல்கிறது. இது தொடர்பாக பலர் இணையத்தில் கண்டனங்களையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் பெண்ணிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த ஒரு யூடியூப் சேனலைச் சேர்ந்த மூன்று பேரை சாஸ்திரி நகர் போலீசார் கைது செய்தனர். "சென்னை டாக்" (Chennai Talk) என்ற அந்த யூடியூப் சேனலில், பெண்ணிடம் ஆபாசமாக பேசி எடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனையடுத்து, இந்த வீடியோ தொடர்பாக பெசன்ட் நகரை சேர்ந்த பெண் ஒருவர், பொது இடங்களில் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாஸ்திரி நகர் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் பொது இடத்தில் ஆபாசமாக பேட்டி எடுத்ததாக சென்னை டாக் யூடியூப்...

ஆன்லைன் மூலம் மலை கிளிகள் விற்பனை – டாக்டர் உள்பட 5 பேர் கைது

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஆன்லைன் மூலமும், சந்தைகளிலும் பாதுகாக்கப்பட்ட மலை பிரதேசங்களில் வாழும் கிளிகள் விற்பனை செய்யப்படுவதாக கிண்டி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கிண்டி வனச்சரகர் கிளமெண்ட் எடிசன் தலைமையிலான வனத்துறையினர் ஞாயிற்றுக்கிழமை சந்தைகளில் ஆய்வு செய்தனர். அதன்படி சாந்தோம், மஸ்கான் சாவடி பகுதிகளில் சோதனை செய்தபோது, அங்கு பிறந்து சில நாட்களே ஆன மலை கிளிகளின் குஞ்சுகள் விற்பனை செய்யப்படுவதை கண்டுபிடித்தனர். அத்துடன் ராயபுரத்தில் உள்ள அக்கு பஞ்சர் டாக்டர் முகமது ரமலி (வயது 56) என்பவரது வீட்டில் சோதனை செய்தபோது மலை கிளி குஞ்சுகள் வைத்திருப்பதும் தெரியவந்தது. இந்திய அரசால் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972-ம் ஆண்டு முதல் மலை கிளிகள் பாதுகாப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டது. மலைபிரதேசங்களில் வாழும் கிளிகள், டிசம்பர் மாத இறுதியில் தொடங்கி ஜனவரி மாதம் வரை குஞ்சு பொரிக்கும். இந்த கிளி குஞ்சுகளை மொத்த விற்பனையாளர்கள் எடுத்து வந்து ஒரு ஜோடி...

சென்னையில் பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்பு

சென்னையில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து மயக்க மருந்து கொடுத்து பிச்சை எடுக்க பயன்படுத்தும் கொடூரமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேற்றப்படுகிறது. சாலை ஓரங்களில் இதுபோன்ற குழந்தைகளை மயக்கநிலையில் படுக்க வைத்து, நோய்வாய் பட்ட குழந்தைகளைப்போல காட்டி பிச்சை எடுக்கிறார்கள். சில பெண்கள் மயக்கமடைந்த குழந்தைகளை தங்களது குழந்தைகளைப் போல இடுப்பில் சுமந்தபடி, பசியால் வாடுவது போல காட்டியும் பிச்சை எடுக்கிறார்கள். இது போன்ற கொடுமைகளை ஒழித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டார். அதன்பேரில் குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு போலீசார் துணை கமிஷனர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் சென்னை நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு மற்றும் பாரிமுனை ஆகிய பகுதிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிச்சை எடுக்க பயன்படுத்திய 13 குழந்தைகள் மீட்கப்பட்டது. அந்த குழந்தைகளை, குழந்தைகள் நலக்குழுவிடம் ஒப்படைத்து, மறு வாழ்விற்கு வழிவகை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதுபோல சென்னையில் காணாமல் போனதாக புகார் கூறப்பட்ட...

கட்டுரை

பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...

பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் – திணறும் மத்திய அரசு

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.
- Advertisement -