Friday, October 30, 2020

தமிழகம்

சமூக வலைதளங்களில் வெளியான அறிக்கை என்னுடையதல்ல, தகுந்த நேரத்தில் அரசியல் நிலைப்பாட்டைத் தெரிவிப்பேன் – ரஜினி

கடந்த சில தினங்களாக அரசியல் நிலைப்பாடு குறித்து, ரஜினி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதனிடையே, சமூக வலைதளத்தில் ரஜினி வெளியிட இருந்த அறிக்கை இதுதான் எனச் சில தகவல்கள்...

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மசோதா – ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி தி.மு.க ஆர்ப்பாட்டம்

மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கோரி கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக கடந்த செப். 15 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கவில்லை. இந்த மசோதாவுக்கு இன்னும் காலம் தாழ்த்தாமல் ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என, தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன இந்நிலையில், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்காத ஆளுநரைக் கண்டித்தும் ஆளுநருக்கு அடங்கிப்போவதாக தமிழக அரசைக் கண்டித்தும், கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு இன்று (அக். 24) தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகை...

சென்னையில் காய்கறி விலை உயர்வு

சென்னையில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஊரடங்கு தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருவதால் காய்கறிகளின் விலையும் தொடர்ந்து ஏற்றத்திலேயே இருக்கிறது. வாரத்தின் முதல் நாளான இன்றும் கடும் விலையேற்றம் காணப்படுவதால் சென்னை வாசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி விலை இன்று (அக்டோபர் 19) 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று இதன் விலை 25 ரூபாயாக மட்டுமே இருந்தது. வெங்காயம் விலையும் 70 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்று 50 ரூபாயாக இருந்தது. அவரைக்காய் விலை 45 ரூபாயாக உயர்ந்துள்ளது. நேற்று 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. பீன்ஸ் விலை 30 ரூபாயாகவும், பீட்ரூட் விலை 50 ரூபாயாகவும், கத்தரிக்காய் விலை 20 ரூபாயாகவும் உள்ளது. காய்கறிகளின் விலைப் பட்டியல்: தக்காளி - ரூ.45 அவரைக்காய் - ரூ.45 பீன்ஸ் - ரூ.45 பீட்ரூட் - ரூ.30 பாகற்காய் - ரூ.30 கத்தரிக்காய் - ரூ.20 முட்டைகோஸ் - ரூ.25 குடை...

இலங்கை

சர்வதேச நாடுகளின் உதவியுடன் தனி அரசை உருவாக்க வேண்டும் என நினைத்தால் அதற்கும் தயார் – சிவாஜிலிங்கம்

சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம் என தமிழித் தேசிய கட்சியின் பொதுசெயலாளர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியைத் தவிர, ஐக்கியம், சமஷ்டி குறித்த பேச்சுக்கு இடமில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறினார். இது குறித்து கருத்துத் தெரிவித்த சிவாஜிலிங்கம் கூறியதாவது: ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியலமைப்பு தேவையில்லை என்று வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார். அவ்வாறு சாத்தியம் ஏற்படாத பட்சத்தில் பிரிந்து சென்று தனி அரசை உருவாக்க வேண்டும் என்பது அவர்களின் சிந்தனையாக இருந்தால், அதனை நோக்கி பயணிப்பதற்கும் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஒற்றையாட்சி என்றால் புதிய அரசியல் அமைப்பு என்ற ஒன்று தேவையில்லை என்றும் ஏற்கனவே உள்ள அரசியலமைப்புக்களும் தமிழ் மக்களின் சம்மதமின்றி நிறைவேற்றப்பட்டவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஆகவே, இலங்கைக்குள் தீர்வு இல்லையென்றால் சர்வதேச நாடுகளின் உதவியுடன் ஐக்கிய இலங்கைக்குள் அதியுச்ச சமஷ்டியை உருவாக்க முயற்சிப்போம்...

நான்காவது முறையாக இலங்கையின் பிரதமரானார் ராஜபக்சே

இலங்கையில் கடந்த 5 ஆம் தேதியன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சி அதிக இடங்களைப் பெற்று அபார வெற்றி பெற்றது. இதையடுத்து, நான்காவது முறையாக இலங்கையின் பிரதமர் பொறுப்பை ராஜபக்ச ஏற்றுள்ளார். கெலானியாவில் உள்ள ராஜமகா விகாரியா புத்த கோயிலில் நடைபெற்ற விழாவில் இலங்கையின் அதிபரும், தனது சகோதரருமான கோத்தபய ராஜபக்சே முன்னிலையில் மகிந்த ராஜபக்சே பதவியேற்றார். 1970ம் ஆண்டில் அரசியலுக்கு வந்த ராஜபக்சே அரசியலில் தனது ஐம்பதாண்டு காலத்தை நிறைவு செய்துள்ளார். நடந்து முடிந்த தேர்தலில் இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் 5 லட்சம் வாக்குகள் பெற்று ராஜபக்சே வெற்றி பெற்றார். இதுவரை இரண்டு முறை இலங்கையின் அதிபராகவும், மூன்று முறை பிரதமராகவும் பதவி வகித்துள்ள ராஜபக்சே தற்போது நான்காவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்றுள்ளார்.

இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் கைது

யாழ்ப்பாணம் இலங்கை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம், வல்வெட்டித்துறையிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (ஜூலை 5) முற்பகல் 9.30 மணியளவில் கைது செய்யப்பட்டார். வல்வெட்டித்துறை போலீஸார் அவரை கைது செய்தனர். 2018 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்தில், பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு கேக் வெட்டியது தொடர்பாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை என்ற குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார். நீதிமன்ற பிடியாணையின் கீழ் கைது செய்யப்பட்ட சிவாஜிலிங்கம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதுடன், அவரை பருத்தித்துறை நீதிபதி இல்லத்தில் ஆஜர்ப்படுத்தினர். அவரை பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார். இதேநேரம் வடமராட்சி உள்ளிட்ட யாழின் பல பகுதிகளில் இராணுவத்தினர் மோட்டார் சைக்கிளில் வீதி ரோந்து பணிகளிலும் ஈடுபட்டனர். மேலும் தமிழீழ விடுதலைப்புலிகளில் ஒரு பிரிவினரான கரும்புலிகள் நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படும் நிலையில், இந்த கைது சம்பவம் இடம்பெற்றது...

சினிமா

30% சம்பளத்தை விட்டுக் கொடுத்து, சினிமா உலகம் மீண்டெழ உதவ நடிகர்களுக்கு வேண்டுகோள் – பாரதிராஜா

சென்னை தமிழ்த் திரையுலகில் பல்வேறு நடிகர்கள் தாமாகவே முன்வைத்து சம்பளக் குறைப்பு குறித்து அறிவித்துள்ளனர். இதனிடையே, தற்போது தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தளர்வுகள் அறிவிக்கப்பட்டுப் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றிருப்பீர்கள். அனைவரும் பாதுகாப்பாகச் செயல்படுங்கள். ஒருவரின் அஜாக்கிரதை அனைவரின் நலத்தையும் பாதிக்கும். எனவே உணர்ந்து பாதுகாப்பாக, சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, பரிசோதனைகள் செய்துகொண்டு பணி செய்யுங்கள். திரையுலகம் வெகு சீக்கிரம் மீண்டுவிடும். கொரோனா தொற்று பரவலிலிருந்தும் நம் நாடு மீண்டுவிடும். அந்த மீள்தலுக்கு நாம் ஒவ்வொருவரும் துணை நிற்க வேண்டும். கரோனாவுக்கு முன் தொடங்கி பாதியில் நிறுத்தி வைத்திருக்கும் எண்ணற்ற படங்களை முடித்து திரைக்குக் கொண்டுவரும் வேலையை மீண்டும் தொடங்க வேண்டும். அப்படி தொடங்க நம் நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மனது வைக்க வேண்டும். ஏற்கெனவே பணம் பிறரிடம் வாங்கி முதலீடு போட்டதில் தேக்க நிலை. அதற்கான...

தீபாவளிக்கு 3 படங்களை வெளியிட திட்டம்

கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் மார்ச் மாதம் மத்தியில் இருந்து தியேட்டர்கள் மூடப்பட்டன. சுமார் ஏழு மாதங்களுக்குப் பிறகு கடந்த 15ம் தேதி முதல் சில மாநிலங்களைத் தவிர பல மாநிலங்களில் தியேட்டர்கள் திறக்கப்ட்டன. தமிழ்நாட்டில் இந்த வாரம் திறக்கப்படலாம் என்ற ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. விஜயதசமிக்குள் தியேட்டர்களைத் திறந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் தரப்பில் எண்ணுகின்றனர். அதற்கு அனுமதி கிடைக்கும் என்றே தெரிகிறது. அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின்படி 50 சதவித இருக்கைகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வெறும் 50 சதவீத வசூல் கிடைத்தால் வியாபார ரீதியாக பெரிய படங்கள் பாதிக்கப்படும். அதனால் பெரிய படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. தீபாவளிக்கு 'மாஸ்டர்' வெளிவந்தால் நன்றாக இருக்கும் என தியேட்டர்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், 200 கோடி ரூபாய் செலவில் தயாராகியுள்ள இப்படம் அன்று வெளிவர வாய்ப்பில்லை. 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்கும் போது மட்டுமே படத்தை வெளியிட வாய்ப்புள்ளது. எனவே, இந்த...

“800” திரைப்படம் – விஜய் சேதுபதிக்கு இலங்கை தமிழர்கள் எதிர்ப்பு

இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் பயோபிக் படத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு இலங்கையில் வாழும் தமிழர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  இது குறித்து பேசிய வடக்கு கிழக்கு போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர், அத்தனை தமிழர்கள் செத்து மடிந்த நாளில், போரை வெற்றிகரமாக முடித்ததற்காக மகிந்த ராஜபக்சேவுக்கு முத்தையா முரளிதரன் நன்றி தெரிவித்ததாக குறிப்பிட்டனர். அதே போல்  இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த கோரிக்கைகள் எழுந்த போது, இங்கே அமைதி நிலவுவதாக முத்தையா முரளிதரன் கூறியதாகவும், கோத்தபய ராஜபக்சேவை ஆதரித்து அவர் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினர்.

ஆன்மீகம்

புத்த கயா

புத்தகயை (புத்த கயா அல்லது உள்ளூர் உச்சரிப்பின்படி போத்கயா. இந்திய மாநிலமான பீகாரின் கயா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். கௌதம புத்தர் இங்குள்ள அரசமரத்தடியில் (போதி மரம்) ஞானம் பெற்ற இடம் என்பதால், உலகம் முழுவதுமுள்ள பெளத்தர்களுக்கு புத்தகயா புனிதத் தலமாகத் திகழ்கிறது. முற்காலத்தில் போதிமண்டா எனப்பட்ட இவ்விடத்தில் பிக்குகள் தங்கும் பெரிய விகாரம் ஒன்று இருந்தது. புத்த காயாவில் உள்ள முதன்மையான துறவிமடம் போதிமண்டா விகாரையாகும். இது இப்போது மகாபோதி கோயில் என அழைக்கப்படுகிறது. கௌதம புத்தரின் வாழ்க்கையோடு தொடர்புடைய நான்கு யாத்திரைத் தலங்களில் புத்த கயாவே முதன்மையானதாகப் புத்த மதத்தினர் கருதுகின்றனர். மற்றவைகள் குசிநகர், லும்பினி, சாரநாத், கபிலவஸ்து, புத்த கயா, சாரநாத் மற்றும் சாஞ்சி ஆகும். 2002 ஆம் ஆண்டில் மகாபோதி கோயில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது.

பக்தர்கள் இன்றி பூரி ரத யாத்திரை தொடங்கியது – வீடுகளில் இருந்தே மக்கள் தரிசனம் செய்ததனர்

பக்தர்கள் இன்றி பூரி ரத யாத்திரை தொடங்கியது - வீடுகளில் இருந்தே மக்கள் தரிசனம் செய்ததனர் பூரி ஒடிசா மாநிலத்தின் கடற்கரை நகரான பூரியில் உள்ள புகழ்பெற்ற ஜெகநாதர் கோவில் மூலவர்களாக ஜெகநாதர் (பகவான் விஷ்ணு), அவரின் சகோதரர் பாலபத்திரர், சகோதரி தேவி சுபத்ரா ஆகியோருடன் சுதர்சன சக்கரமும் உடன் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை புகழ்பெற்றது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் இந்த மூன்று மூலவர்களுக்குப் புதிய தேர் செய்யப்பட்டு, அதில் அவர்கள் அமர்ந்து நகரை வலம் வருவார்கள். தங்கள் இருப்பிடத்தில் இருந்து புறப்படும் ஜெகநாதர், பாலபத்திரர், தேவி சுபத்ரா ஆகியோர் 2 கி.மீ. தொலைவில் உள்ள தங்களின் அத்தை கோயிலான குண்டிச்சா கோவிலுக்கு செல்வார்கள். அங்கிருந்து 9-வது நாள் மீண்டும் புறப்பட்டு பூர்வீக இடத்துக்குத் திரும்புவார்கள். மிக நீண்ட தெருக்களில் வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட மூன்று தேர்களையும் இழுக்கும் வைபவம் படாதண்டா என்று அழைக்கப்படுகிறது. 10...

ஜோதிடர் பேஜன் தருவாலா மரணம் – மே -15 ம் தேதியுடன் கொரோனா நாட்டை விட்டு போய்விடும் என்று கணித்தவர்

மும்பை கொரோனா வைரஸ் மே -15 ம் தேதியுடன் நாட்டை விட்டு போய்விடும் என்று சொன்ன உலகப்புகழ் பெற்ற ஜோதிடர் பேஜன் தருவாலா, கொரோனாவுக்கே பலியான சம்பவம் அவரது அபிமானிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலா உலகப்புகழ் பெற்றவர். பல பிரபலங்கள் இவரிடம் அவ்வப்போது தங்களது எதிர்காலம் குறித்து கேட்டறிவர். அவ்வப் போது நாடுகளின் எதிர்காலம், உலக அரசியலின் எதிர்காலம் என விரிவான பல முக்கியக் கணிப்புகளை வெளியிடுவது பேஜன் தருவாலாவின் வழக்கம். அதைப்போல, கொரோனா வைரஸ் கிருமி மே 15ம் தேதியுடன் இந்தியாவை விட்டு போய்விடும் என பேஜன் தருவாலா ஆரூடம் சொல்லி இருந்தார். இந்தியா இந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற நெருக்கடிகளைச் சந்தித்தாலும், அடுத்த ஆண்டு பீனிக்ஸ் பறவை போல எழுந்து நிற்கும் எனவும் அவர் கூறியிருந்தார். இதுதான் பேஜன் தருவாலா சொன்ன கடைசி ஆரூடமும் கூட. ஆனால்,...

வர்த்தகம்

தங்கம் விலை குறைந்ததால் நகை கடைகளில் விற்பனை உயர்வு

சென்னை தங்கத்தின் விலை கடந்த 1-ந் தேதி ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 815 ஆக இருந்தது. அதன்படி, ஒரு பவுன் தங்கம் ரூ.38 ஆயிரத்து 520-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், உலக அளவிலான பொருளாதார மாற்றம் மற்றும் பங்கு சந்தையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கம் காரணமாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், நேற்று முன்தினம் தங்கத்தின் விலை திடீரென பவுனுக்கு ரூ.1,464 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.37 ஆயிரத்து 440-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கத்தின் விலை மாற்றம் இன்றி அதே விலைக்கு விற்பனையானது. இதனால், நகை கடைகளில் தங்கம் விற்பனை நேற்று அதிகரித்து காணப்பட்டது. தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிக அளவில் குறைந்ததாலும், பண்டிகைகள் நெருங்குவதாலும், பொதுமக்களிடையே தங்கம் வாங்க மிகவும் அதிகமாக ஆர்வம் ஏற்பட்டது. நேற்று சென்னையில் உள்ள ஜி.ஆர்.டி. ஜூவல்லரி, பிரின்ஸ் ஜூவல்லரி, லலிதா ஜூவல்லரி, கசானா...

சென்னையில் இன்றைய பெட்ரோல் – டீசல் விலை நிலவரம்

சென்னை, நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஜூன் முதல், அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. இந்நிலையில் சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 84.14 ரூபாய், டீசல் லிட்டர் 75.95 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில், பெட்ரோல் விலை 28வது நாளாக இன்றும் மாற்றம் செய்யப்படவில்லை. டீசல் விலையிலும் 18 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரே விலையில் நீடிக்கிறது. சென்னையில் 28 ஆவது நாளாக விலை மாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.84.14-க்கும், 18 வது நாளாக மாற்றம் செய்யப்படாமல் ஒரு லிட்டர் டீசல் ரூ.75.95-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது வாகன ஓட்டிகளிடையே ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து 13 வது ஆண்டாக முகேஷ் அம்பானி முதலிடம்

புதுடெல்லி இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை, போர்ப்ஸ் இந்தியா வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி, 13-வது ஆண்டாக இம்முறையும் முதலிடத்தை பிடித்துள்ளார். அவரது சொத்து மதிப்பு $88.7 பில்லியனாக உள்ளது. இது இந்திய மதிப்பில் 6.50 லட்சம் கோடி ரூபாய் ஆகும். தொழிலதிபர் அதானி, இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு $25.2 பில்லியனாக உள்ளது. $20.4 பில்லியன் சொத்து மதிப்புடன் எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாமிடத்தில் உள்ளார். $15.4 பில்லியன் சொத்து மதிப்புடன் தொழிலதிபர் ராதாகிஷான் தாமனி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார் $12.8 பில்லியன் சொத்து மதிப்புடன் ஹிந்துஜா பிரதர்ஸ் கோடீஸ்வரர்கள் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளனர் கொரோனா தடுப்பூசி சோதனையில் ஈடுபட்டு வரும் புனேவின் சீரம் இன்ஸ்டிடியூட் இந்தியாவின் சைரஸ் பூனவல்லா $11.5 பில்லியன் சொத்து மதிப்புடன் இந்த பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளார். $11.4 பில்லியன் சொத்து மதிப்புடன் கட்டிட தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பல்லோஞ்சி...

இந்தியா

பீகார் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடக்கம்

பாட்னா நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும். 3 கட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7...

தெருவோர வியாபாரிகளுக்குத் தேவை நிவாரண உதவி, கடன் அல்ல – பிரியங்கா காந்தி

தெருவோர விற்பனையாளர்களுக்கு நிவாரண உதவி தான் தேவையே அன்றி கடனுதவி அல்ல என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சுட்டுரைப் பதிவில், உ.பி.யின் சில தெருவோர விற்பனையாளர்களுடன் பிரதமர் பேசுகிறார். முழு பொது முடக்கத்தில், தெருவோர விற்பனையாளர்கள் மற்றும் சிறிய கடைக்காரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இன்று, தெருவோர விற்பனையாளர்கள், கடைக்காரர்கள், சிறு வணிகர்கள் ஆகியோருக்கு சிறப்பு நிவாரண உதவித் தொகுப்பு தேவை, கடன் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி – 480 பேர் உயிரிழப்பு

டெல்லி இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 45,148 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 79,09,959 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 480 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,19,014 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் இன்று 59,105 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்: இதுவரை மொத்தம் 71,37,228 பேர் குணமடைந்துள்ளனர். 6,53,717 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

உலகம்

கொரோனாவுக்கு உலக அளவில் 11 லட்சத்து 71 ஆயிரத்து 188 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11.71 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 1,171,188 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 44,230,209 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 32,436,681 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 79,777 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் தேர்தல் – டிரம்பின் இந்திய காற்று மாசு கருத்து

இன்று நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் பருவநிலை ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியதை ஆதரிக்கும் வகையில் பேசிய டொனால்டு டிரம்ப், இந்தியா, சீனா மற்றும் ரஷ்யாவில் காற்று "அசுத்தமாக" உள்ளது என தெரிவித்துள்ளார். அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் சூழலில் வியாழனன்று மாலை இந்த விவாதம் நடைபெற்றது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கு பொது முடக்கத்தை கொண்டு வருவதிலிருந்து பருவ நிலை மாற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் விதத்தில் எரிபொருள் தொழிற்சாலைகளை மூடுவது வரை என அனைத்தும் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் நடுவரான க்ரிஸ்டன் வெல்கர் டிரம்பிடம் பருவநிலை மாற்றத்தை எவ்வாறு கையாளுவீர்கள் அதே சமயத்தில் வேலை வாய்ப்புகளை எவ்வாறு பெருக்குவீர்கள் என்று கேட்டார். அதற்கு பதிலளித்த டிரம்ப், "கடந்த 35 வருடங்களில் அமெரிக்கா வெளியிடும் கார்பன் எண்ணிக்கை சரியானதாக உள்ளது. சீனாவை பாருங்கள் அவ்வளவு அசுத்தமாக உள்ளது, ரஷ்யாவை பாருங்கள் எவ்வளவு...

வியட்நாமில் கனமழை நிலச்சரிவில் ராணுவ முகாம் புதைந்து 22 பேர் பலி

ஹனோய் வியட்நாம் நாட்டில்கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே வாரத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 64 என அதிகரித்துள்ளது. அக்டோபர் மாத ஆரம்ப நாட்களில் கனமழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிலச்சரிவு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வியட்நாம் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பாண் வான் ஜியாங்க், நாங்கள் இன்னுமொரு உறக்கமற்ற இரவை எதிர்கொண்டோம் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், குண்டு வீச்சு போல மழை எங்கள் மீது விழுந்தது என தெரிவித்துள்ளனர். நள்ளிரவு 2 மணியில் இருந்தே அப்பகுதியில் 5 முறை நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும், அங்கிருந்த மலையே வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். துவா...

விளையாட்டு

ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்

அபுதாபி துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும்...

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா விலகல்

துபாய் ஐபிஎல் 2020 தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் வேக பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா காயம் காரணமாக விலகினார். வயிற்று தசை காயம் காரணமாக இஷாந்த் சர்மா விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ஸ்பின்னர் அமித் மிஸ்ரா காயம் காரணமாக டெல்லி அணியில் இருந்து விலகினார். தற்போது மாற்று வீரர் தேடும் முயற்சியில் டெல்லி கேபிட்டல்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது

சூழ்நிலைக்கு தகுந்தபடி நாங்கள் நன்றாக ஆடவில்லை – டோனி

அபுதாபி, ஐ.பி.எல் கிரிக்கெட்டில் அபுதாபியில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10 ரன் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்சை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்தது. இதில் கொல்கத்தா நிர்ணயித்த 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களே எடுத்து அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. 51 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 81 ரன்கள் குவித்த கொல்கத்தா வீரர் ராகுல் திரிபாதி ஆட்டநாயகன் விருது பெற்றார். தோல்வி குறித்து சென்னை அணியின் கேப்டன் டோனி கூறியது: மிடில் ஓவர்களில் கொல்கத்தா அணியினர் 2-3 ஓவர்கள் அருமையாக பந்து வீசினார்கள். பிறகு இரண்டு மூன்று விக்கெட்டுகளை நாங்கள் அடுத்தடுத்து இழந்தோம். அந்த சமயத்தில் எங்களது பேட்டிங் நன்றாக இருந்து இருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரியாக இருந்து இருக்கும். சுழற்பந்து வீச்சாளர் கரண் ஷர்மா நன்றாக பந்து வீசினார். பவுலர்கள்...

பொது

மேட்டூர் அணை நீர்மட்டம் 100.78 அடியாக உள்ளது – விவசாயிகள் மகிழ்ச்சி

சேலம் மேட்டூர் அணை வரலாற்றில், 69-வது முறையாக, அதன் நீர்மட்டம் இன்று 100 அடியை எட்டியது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 2-வது முறையாக மீண்டும் 100 அடியை எட்டியது. 120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணைக்கு, தென்மேற்குப் பருவமழை காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் நீர்வரத்து அதிகரித்தது. இதன் காரணமாக, நடப்பாண்டில் முதன்முறையாக கடந்த மாதம் 25-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடி உயரத்தை எட்டியது. இதன் தொடர்ச்சியாக, கடந்த 13-ந் தேதி 2-வது முறையாக நீர்மட்டம் 100 அடியாக உயர்ந்தது. அதன் பின்னர் கடந்த 25ம் தேதி மேட்டூர் அணை 3-வது முறையாக 100 அடியை எட்டி பிடித்துள்ளது. இந்த நிலையில் தற்போது மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. அணைக்கு நேற்று விநாடிக்கு 14 ஆயிரத்து 210 கன...

பூனை என நினைத்து புலிக்குட்டியை வாங்கி வளர்த்த பிரான்ஸ் நாட்டு தம்பதி

நார்மாண்டி பூனை வளர்க்க ஆசைப்பட்டு பிரான்ஸ் நாட்டு தம்பதி ஒன்று புலிக்குட்டியை வாங்கியதால் போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். பிரான்ஸ் நாட்டின் லே ஹார்வே நகரைச் சேர்ந்த தம்பதி சவன்னா பூனைக்குட்டி வளர்க்க ஆசைப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் விளம்பரம் ஒன்றின் மூலமாக பூனை என்று நினைத்து புலிக்குட்டி ஒன்றை வாங்கியுள்ளனர். 2018 ம் ஆண்டில் இந்திய மதிப்பில் ரூ 5 லட்சம் கொடுத்து புலிக்குட்டியை வாங்கியுள்ளனர். ஆனால், சில நாட்களில் குட்டியில் ஏற்பட்ட உருவ மாற்றத்தையடுத்து அவர்களுக்கு சந்தேகம் வந்ததால் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து அவர்கள் வளர்த்து வந்தது இந்தோனேஷியாவின் சுமத்ரான் வகை புலி என்று தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு பாதுகாக்கப்பட்ட விலங்கை கடத்தியாக லே ஹார்வே தம்பதி 9 பேர்களுடன் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்ட்டனர்.

இனி ரயில் டிக்கெட்களை ‘அமேசான் பே’ தளத்திலும் முன்பதிவு செய்யலாம்

ஐஆர்சிடிசி எனும் இந்திய ரயில்வேயின் நிறுவனமானது தனியார் மயமாக்கலை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்துள்ளது. அதாவது, ஈ-காமர்ஸ் நிறுவனமான "அமேசான் இந்தியா", இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷனுடன் (ஐஆர்சிடிசி) தனது கூட்டணி குறித்த அறிவிப்பை நேற்று (7.10.2020) அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை அமேசான் தங்கள் தளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை ஐஆர்சிடிசி அனுமதிக்கும். அமேசான் இந்தியாவின் இந்த புதிய சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் தங்கள் பயன்பாட்டில் ரயிலில் உள்ள அனைத்து வகுப்புகளிலும் இருக்கை மற்றும் ஒதுக்கீடு கிடைப்பதை சரிபார்க்க முடியும். மேலும் டிக்கெட்டுகளுக்கு மிகவும் எளிமையாக ஒரே கிளிக்கில் பணம் செலுத்த, அவர்கள் அமேசான் பே பேலன்ஸ் வாலட்டில் பணத்தை சேர்க்கலாம். இந்த ஒத்துழைப்பு அமேசான் வாடிக்கையாளர்களுக்கு, அமேசானில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு பிஎன்ஆர் நிலையை நேரடியாக சரிபார்ப்பது போன்ற வசதிகளையும் வழங்குகிறது. மேலும், அமேசானில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்யவும், அதனை ரத்து செய்யவும்...

கட்டுரை

பனை மரம் தமிழ்ச் சமூகத்தின் உயிர் சாட்சி

தமிழகத்தின் மாநில மரம் என்ற பெருமைக்குரியது பனை. ஆனால், பனை தொடர்பான மக்களின் வழக்காறு என்பது பெரும்பாலும் எதிர்மறையாகவே இருந்துவந்திருக் கிறது. ‘பனை மரத்துல பாதி வளர்ந்திருக்கான், ஆனால் ஒண்ணுமே தெரியலை’, ‘பனை மரத்துக்குக் கீழ நின்னு பாலைக் குடிச்சாலும், ஊரு தப்பாத்தான் பேசும்’ என்று பனை மற்றும் பனை சார்ந்த விஷயங்கள் ஒரு நபரை அல்லது ஒரு விஷயத்தை இழிவுசெய்யவே பயன்பட்டு வருகிறது.

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது. ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன. ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில்...

பொருளாதார மந்த நிலையும், திணறும் ஜி.எஸ்.டி பகிர்ந்தளிப்பு நிதிப் பற்றாக்குறையும் – திணறும் மத்திய அரசு

இந்தியா முழுக்க ஒரு வித பொருளாதார மந்த நிலை நிலவிக் கொண்டு இருப்பதை அனைத்து தரப்பினரும் உணருகிறார்கள். இந்த பொருளாதார மந்த நிலையினால் வியாபாரிகளுக்கு வியாபாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மத்திய அரசுக்கு ஜி.எ.ஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) மற்றும் நேரடி வரிகள் மூலம் வர வேண்டிய வரி வருவாய் பெரிய அளவில் சரிந்துள்ளது.
- Advertisement -
Html code here! Replace this with any non empty raw html code and that's it.