இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் கேரளா – கவுகாத்தி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
கொச்சியில் நடைபெற்ற இந்த போட்டியில் 43-வது நிமிடத்தில் கேரளா அணியின் ஒபிச்சே பெனால்டி வாய்ப்பில் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இரண்டாம் பாதியின் 50-வது நிமிடத்தில் கவுகாத்தி வீரர் கியான் பதில்கோல் போட்டார். இதனால் ஆட்டம் டிராவில் முடிந்தது.