கொழும்பு
இலங்கையின் புதிய அதிபராக கோத்தபய ராஜபக்சே இரண்டு நாட்களுக்கு முன் பதவி ஏற்றார். இந்நிலையில் இலங்கைக்கு திடீர் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், கொழும்புவில் அங்கு தலைவர்களுடன் சந்திப்பு நடத்தினார். கோத்தபய ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார். இரண்டு நாட்டு உறவுகள் குறித்து இவர்கள் சுமார் 1 மணி நேரம் பேசினார்கள். இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து இவர்கள் தீவிரமாக நீண்ட நேரம் பேசினார்கள். அதன்பின் பிரதமர் மோடியின் சார்பில் இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். இதனை கோத்தபய ராஜபக்சே ஏற்றுக் கொண்டார்.
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அடுத்த வாரம் 29ம் தேதி இந்தியா வருகிறார். இந்தியா வரும் கோத்தபய ராஜபக்சே பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார்.