ஐ.பி.எல் 2020 ஏலத்தில் கலந்துகொள்ளவுள்ள வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் டிசம்பா் 19-ஆம் தேதி முதன்முறையாக கொல்கத்தாவில் ஐபிஎல் 2020 சீசனுக்கான வீரா்கள் ஏலம் நடைபெறவுள்ளது. ஏலத்துக்கு முன்னதாக 71 வீரா்களை அணிகள் விடுவித்துள்ளன. 35 வெளிநாட்டு வீரா்கள் உள்பட 127 பேரை தக்க வைத்துக்கொண்டன. ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க 971 வீரர்கள் விருப்பம் தெரிவித்தார்கள். இந்நிலையில் அணிகளின் விருப்பத்துக்கு ஏற்ப வீரர்களின் பட்டியல் தற்போது 332 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. 332 வீரர்களில் இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத 19 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.
இந்த 332 வீரர்களிலிருந்து 73 வீரர்களை 8 அணிகளும் தேர்வு செய்யவுள்ளன. இந்த 73 வீரர்களில் 29 வீரர்கள், வெளிநாட்டு அணிகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
சமீபத்தில் நடைபெற்ற சையது முஷ்டாக் அலி போட்டியில் தமிழக வீரர்கள் அசத்தினார்கள். இதனால் இந்த வருட ஐபிஎல் ஏலத்தில் தமிழக வீரர்கள் சிலருக்கு ஐபிஎல் ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
ஐபிஎல் 2020 ஏலத்தில் பங்குபெறவுள்ள 10 தமிழக வீரர்கள்:
1. வருண் சக்கரவர்த்தி – ரூ. 30 லட்சம் (அடிப்படை விலை)
2. ஷாருக் கான் – ரூ. 20 லட்சம்
3. சாய் கிஷோர் – ரூ. 20 லட்சம்
4. எம். சித்தார்த் – ரூ. 20 லட்சம்
5. ஹரி நிஷாந்த் – ரூ. 20 லட்சம்
6. பெரியசாமி – ரூ. 20 லட்சம்
7. மணிகண்டன் – ரூ. 20 லட்சம்
8. பாபா அபராஜித் – ரூ. 20 லட்சம்
9. முகமது – ரூ. 20 லட்சம்
10. அபினவ் – ரூ. 20 லட்சம்