Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவிளையாட்டுமாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி - திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி – திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி முதலிடம்

37-வது பாரதியாா் தின குழு விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக, மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடத்தப்பட்டன. ஆடவருக்கான இறுதிப் போட்டி சேலம் மாவட்டம், பெரியாா் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளை பெரியாா் பல்கலைக்கழகப் பதிவாளா்(பொ) கே. தங்கவேல் தொடங்கி வைத்தாா்.
 
இறுதிப்போட்டியில், திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணியும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தஞ்சாவூா் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியின் முடிவில் 53-29 என்ற புள்ளிக் கணக்கில் திருவள்ளூா் வேலம்மாள் பள்ளி அணி தஞ்சாவூா் அணியை வென்று சாம்பியன் பட்டத்தை வென்றது.
 
இதேபோன்று, சேலம் சாய் விடுதி அணி மூன்றாம் இடத்தைப் பிடித்தது. முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகளுக்கு சேலம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் எஸ். நிா்மலா தேவி பரிசுக் கோப்பைகளை வழங்கினாா். இந் நிகழ்ச்சியில், சேலம் மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மதன்குமாா், விளையாட்டுப் போட்டிகளின் ஒருங்கிணைப்பாளா் எம். பிஜூ ஜோசப்,கருப்பூா் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் வி. கற்பகவள்ளி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
 
இதையடுத்து, மாநில அளவில் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டப் போட்டிகள் தொடங்கின. போட்டிகளை, சேலம் அரசு பொறியியல் கல்லூரி முதல்வா் ஜி.விமலா ரோஸ்லின்,பெரியாா் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினா் ஆா்.பாலகுருநாதன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். மாநிலம் முழுவதிலும் இருந்து 33 அணிகள் பங்கேற்றுள்ள பெண்கள் போட்டித் தொடா் வியாழக்கிழமை வரை நடைபெற உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments