Saturday, March 25, 2023
Home விளையாட்டு விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது, 2019-ன் சிறந்த ஒருநாள்போட்டி வீரர் ரோகித் -...

விராட் கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது, 2019-ன் சிறந்த ஒருநாள்போட்டி வீரர் ரோகித் – ஐசிசி

துபாய் 
 
ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சிறப்பு  விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டில் சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கான விருதுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
 
அதில் 2019ம் ஆண்டில் மிகுந்த உத்வேகத்துடன் விளையாடியதாகவும், மனப்பாங்கை பாராட்டியும் இந்திய அணியின் கேப்டன் விராட்  கோலிக்கு ‘கிரிக்கெட்டின் மன உறுதி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
 
உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை ரசிகர்கள் உற்சாகப்படுத்த வேண்டும் என சைகை செய்ததற்காக இந்த விருது வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டு தடைக்கு பிறகு களம் திரும்பிய ஸ்மித்தை ரசிகர்கள் அவமதித்தபோது கோலி இவ்வாறு செய்கை செய்தார்.  மேலும் 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளின் கேப்டனாகவும் விராட் கோலி தேர்வாகியுள்ளார். 
 
அதேபோல் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 2019ம் ஆண்டின் சிறந்த ஒருநாள் போட்டி வீரருக்கான விருதுக்கு  தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2019ம் ஆண்டின் ஒருநாள் போட்டி அணியில் கோலி, சமி, ரோகித், குல்தீப் ஆகிய இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
- Advertisment -

Most Popular

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

Recent Comments