Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்இந்தியாவின் அதிரடி தடை - நெருக்கடியில் மலேசிய வணிக நிலை

இந்தியாவின் அதிரடி தடை – நெருக்கடியில் மலேசிய வணிக நிலை

இந்தியாவில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்தத்தை அமெரிக்க உள்ளிட்ட சில நாடுகள் எதிர்த்தன. அதில் மலேசியாவும் குறிப்பிடத்தக்க நாடு. மலேசிய பிரதமர் மகாதீர் முகமது, மதசார்பற்ற நாடு என்று கூறிக்கொள்ளும் இந்தியா முஸ்லீம் மக்களின் குடியுரிமையை பறிக்க செய்யும் நடவடிக்கைகள் வருத்தமளிக்கின்றன. இதே போல் நாங்களும் சட்டம் போட்டால் இங்கும் கூட குழப்பமும், நிலையற்ற தன்மையும் உண்டாகும். அனைத்து மக்களும் பாதிக்கப்படுவார்கள் என்று கூறினார். 
 
இதற்கு அப்போதே இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், மலேசிய பிரதமர் மகாதீர் முகமது உண்மையில் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு உட்பட்ட விஷயத்தில் அவர் கருத்து தெரிவித்துள்ளார் என  பதிலடி கொடுத்தது. 
 
இது போதாது என்று, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாமாயில் அளவை இந்தியா குறைக்க முடிவெடுத்துள்ளது. கடந்த ஆண்டு 44 லட்சம் டன் பாமாயிலை மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால் தற்போது இந்திய அரசின் அறிவுறுத்தலால் வணிகர்கள் இந்தோனேசியாவில் இருந்து பாமாயிலை இறக்குமதி செய்கின்றனர்.
 
பாமாயில் இறக்குமதிக்கு இந்திய அரசு விதித்துள்ள தடைகளால் கடும் நெருக்கடியான சூழலுக்குள் மலேசியா தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments