பழைய வாகனங்களை அழிக்கும் மையங்களை அமைத்து செயல்படுத்துவதற்கான விதிமுறைகள் தொடர்பான வரைவுக் கொள்கைக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்து, மத்திய அமைச்சரவைச் செயலகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. பதிவு எண்களை புதுப்பிக்காத வாகனங்கள், பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் கைவிடப்பட்ட வாகனங்களையும் அழித்தல் தொடர்பான பரிந்துரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன.
வாகன அழிப்பு மையம், அரசு உற்பத்தியாளர் உரிமையாளர் ஆகியோரின் பொறுப்புகள் குறித்த வழிகாட்டுதல்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் நீண்டகாலத் திட்டமான இந்த கொள்கை இறுதி செய்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.