Saturday, April 20, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்ஓ.என்.ஜி.சி லாபம் 50 சதவீதம் சரிவு

ஓ.என்.ஜி.சி லாபம் 50 சதவீதம் சரிவு

பொதுத்துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி நிறுவனம், அக்டோபர் – டிசம்பர் காலாண்டில் (2019) ரூ.4,150 கோடியை தனிப்பட்ட நிகர லாபம் ஈட்டி உள்ளது. கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் அது ரூ.8,263 கோடியாக இருந்தது. ஆக, லாபம் 50 சதவீதம் சரிவடைந்துள்ளது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 14 சதவீதம் குறைந்து ரூ.23,710 கோடியாக இருக்கிறது.

மும்பை பங்குச்சந்தையில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது ஓ.என்.ஜி.சி. நிறுவனப் பங்கு ரூ.105.90க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை அதிகபட்சமாக ரூ.106.10-க்கும், குறைந்தபட்சமாக ரூ.103.05-க்கும் சென்றது. இறுதியில் ரூ.103.25-ல் நிலைகொண்டது. இது, வியாழக்கிழமை இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 1.99 சதவீத இறக்கமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments