24AM ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகும் அயலான் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகிவுள்ளது. ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்குகிறார். முதல்முறையாக சிவகார்த்திகேயன் படத்திற்கு ஏர்.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.
‘இன்று நேற்று நாளை’ படம் ஒரு Science Fiction படமாக இருந்தது. அதே சமயத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் ரசிக்கும் விதமாக காமெடியாகும் இருந்தது. இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இப்படத்தின் திரைக்கதைகாக இயக்குநர் ரவிக்குமார் சினிமா விமர்சகர்கள் மத்தியில் பெரும் பாராட்டைபெற்றார்.
அயலான் என்று பெயர் வெளியாகும்போதே இத்திரைப்படம் வேற்றுகிரகவாசிகள் குறித்த படமாக இருக்கலாம் என கணிக்கப்பட்டது. அந்த கணிப்பு தற்போது உண்மையாகி இருக்கிறது. தனது ட்விட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் அயலான் படத்தின் ஃபர்ஸ்ர் லுக் போஸ்டரை வெளியிட்டு ‘Happy to Introduce my new Friend From another World’என படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து ட்வீட் செய்துள்ளார்.