நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரை முழுமையாக கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளும் மோதும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 21ம் தேதி வெலிங்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.
இதற்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் விராட் கோலியிடம் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த கோலி கூறியது:
அடுத்த 3 ஆண்டுகளுக்கு இதே உத்வேகத்துடன் தான் விளையாடுவேன். 2008ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறேன், வருடத்தில் 300 நாட்கள் கிரிக்கெட்டிற்காக நேரம் ஒதுக்கி கடினமான உழைப்புடன் விளையாடி வருகிறேன்.
அடுத்த 3 ஆண்டுகளுக்கு தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் தற்போது இருக்கும் இதே உத்வேகத்துடன் தன்னால் திறம்பட விளையாட முடியும். வரவுள்ள இரண்டு டி20 உலகக்கோப்பை மற்றும் ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் விளையாட அதிக கவனம் செலுத்தி வருவதாகவும், தன்னுடைய 34 அல்லது 35 வயதில் கிரிக்கெட் களத்தில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று கூறினார்.