இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நடத்தப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் விரைவில் தொடங்க உள்ளன. இப்போட்டிகளில், குவெட்டா கிளேடியேட்டர்ஸ் அணியில் விளையாடும் உமர் அக்மலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திலுள்ள ஊழல் கண்காணிப்பு ஆணையம் அண்மையில் விசாரணை நடத்தியது.
இதை சுட்டிக்காட்டி அந்த ஆணையத்தின் விசாரணை முடிவடையும் வரையில் அனைத்து வகையிலான கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு உமர் அக்மலுக்கு தற்காலிக தடை விதிக்கப்படுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
அக்மல் இடைநீக்கம் செய்யப்பட்ட குற்றத்தின் தன்மையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிடவில்லை. சமீபத்தில் தான், லாகூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்பயிற்சி பரிசோதனையின் போது ஒரு பயிற்சியாளரிடம் மோதல் போக்கை கடைபிடித்து உமர் அக்மல் தடையில் இருந்து தப்பினார்.