Thursday, December 7, 2023
Home ஆன்மீகம் மகாசிவராத்திரி 2020 - மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்

மகாசிவராத்திரி 2020 – மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்கள் என்ன அபிஷேகம் செய்யலாம்

மதுரை

மகாசிவராத்திரி பண்டிகை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. விரதம் இருந்து விடிய விடிய கண் விழித்து சிவ தரிசனம் செய்வதன் மூலம் இறைவனின் அருளை பெறலாம். சிவ பெரமான் அபிஷேகப்பிரியர். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவரவர் ராசிக்கு உரிய பொருட்களால் அபிஷேகம் செய்வதன் மூலம் சிவபுண்ணியம் கிடைக்கும்.

மனிதர்களுக்கு அத்தியாவசிய தேவை உணவு, உறக்கம். இந்த இரண்டையும் விலக்கி சிவனுக்காக விரதம் இருக்கும் நாள்தான் மகாசிவராத்திரி விரதம். சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை. மகா சிவராத்திரி நாளில் நாள் முழுவதும் சிவனை நினைத்து விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும்.

மேஷ ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று வெல்லம் கலந்த நீரை சிவலிங்கத்திற்குப் படைத்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தை சொல்ல வேண்டும். இதனால் நினைத்தது அனைத்தும் நடக்கும்.

ரிஷப ராசிக்காரர்கள், தயிரைக் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

மிதுன ராசிக்காரர்கள், சிவலிங்கத்தை கரும்புச்சாறு கொண்டு அபிஷேகம் செய்தால் ஆசைகள் நிறைவேறும். பாவங்கள் நீங்கும்.

கடக ராசிக்காரர்கள், சர்க்கரை சேர்த்த பால் கொண்டு சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து, மந்தாரைப் பூவால் அலங்கரித்தால், நினைக்கும் காரியம் கூடிய விரைவில் நடக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவப்பு சந்தனம் கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், சிவன் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை வழங்குவார்.

கன்னி ராசிக்காரர்கள், பால் மற்றும் நீரால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நல்ல ஆரோக்கியத்தை அருள்வார். நோய் நொடிகள் நீங்கும்.

துலாம் ராசிக்காரர்கள், பசு மாட்டுப் பாலால் சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்தால், வாழ்வில் நல்ல செல்வ செழிப்போடு இருக்க அருள்புரிவார்.

விருச்சிக ராசிக்காரர்கள், தேன் அல்லது சர்க்கரை கலந்த நீரால் சிவனுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் நல்லது.

தனுசு ராசிக்காரர்கள், குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்து, சிவ பஞ்சாக்ஷர மந்திரத்தைப் படிக்க வேண்டும். இதனால் வாழ்வில் உள்ள இன்னல்கள் நீங்கும்.

மகர ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று சிவனுக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து, வில்வ பழத்தைப் படைத்தால், வாழ்வில் எதிலும் வெற்றிக் கிட்டச் செய்வார்.

மகாசிவராத்திரி அன்று கும்ப ராசிக்காரர்கள், இளநீர் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு சிவலிங்கத்தை அபிஷேகம் செய்தால், நிதி ஆதாயம், லாபம் கிடைக்க அருள்புரிவார்.

மீன ராசிக்காரர்கள், மகாசிவராத்திரி அன்று குங்குமப்பூ கலந்த பாலால் சிவனுக்கு அபிஷேகம் செய்தால், செல்வ செழிப்போடு இருக்க சிவன் அருள்புரிவார்.

- Advertisment -

Most Popular

மிக்ஜம் புயல் எதிரொலி – சென்னை விமான நிலையம் மூடல்

சென்னை 'மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீரால், அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக...

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

Recent Comments