Sunday, December 3, 2023
Home பொது இந்திய இரயில்வேயின் அவலம்.

இந்திய இரயில்வேயின் அவலம்.

இந்திய இரயில்வே மிக நவீனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் 90% இரயில்கள் மிக மோசமான நிலையில் இயங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதை ஆராய்வதற்காக சில இரயில்களில் சென்ற எமது சிறப்பு நிருபர் தெரிவிப்பதாவது: 
 
சென்னையிலிருந்து கொல்கொத்தா வரை செல்லும் கோரோமண்டல் எக்ஸ்பிரஸ் இரயிலில் கழிவறைகள் மிக மோசமாக உள்ளது. அடிப்படை வசதிகளை கூட செய்து கொடுக்க முடியாத இரயில்வே துறையை மக்கள் எப்படி ஆதரிப்பார்கள்? 
 
பயணிகள் சிலர் கூறுகையில், இந்த இரயிலின் கழிவறையை பயன்படுத்துபவர்களுக்கு கட்டாயமாக பெரிய வியாதிகள் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த இரயிலில் பயணம் செய்தவர்கள் கட்டாயமாக மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். எந்தவித பொறுப்பே இல்லாமல் செயல்படும் இரயில்வே ஊழியர்களால், கடுமையான தொற்று நோய் உருவாக வாய்ப்புள்ளது. இந்திய இரயில்வேயை தனியார் மயமாக்கினாலாவது நல்ல வழி பிறக்கிறதா என்று பாப்போம் என்றனர்.
 
இதையும் விட மோசமான ஒரு நிலை, மேற்கு வங்காளம், ஷாலிமார் நகரிலிருந்து புறப்பட்டு கேரளா வழியாக நகர்க்கோயில் சென்றடையும் குருதேவ் எக்ஸ்பிரஸ். 
 
குருதேவ் எக்ஸ்பிரஸ் இரயிலில் கழிவறையை பயன்படுத்துகிறவர்களுக்கு, கொரோனா போன்ற கொடிய தொற்று நோய்கள் வர அதிகபட்ச வாய்ப்புள்ளது. இந்த இரயிலில் இன்னொரு அவலம் என்னவென்றால், கொல்கொத்தாவிலிருந்து ஆந்திரா, கேரளா, கன்னியாகுமரி போன்ற இடங்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் பெரும்பாலும் பயணிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இருக்கையில் அமர்ந்தபடியே பீடி பிடிக்கிறார்கள். காவல் துறையினர் கோச்-ஐ கடந்து செல்லும்போது புகை பிடிப்பவர்களை செல்லமாக கண்டித்துவிட்டு சென்று விடுகிறார்கள். இது அவர்களுக்கு பூரண உரிமை கொடுப்பதாகத்தான் தெரிகிறது. 
 
இதையும் தாண்டி, 8 பேர் அமர வேண்டிய ஒரு கூபேயில் சராசரி 15 பேர் பயணம் செய்கிறார்கள். டிக்கெட் பரிசோதகர் இவற்றை கண்டு கொள்வதாக தெரியவில்லை. இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பெண்கள் அடையும் பாதிப்புக்கு அளவே இல்லை.
 
இதற்கு மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?
- Advertisment -

Most Popular

அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வேண்டுகோள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வானிலை ஆராய்ச்சி மையம் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் மழை/கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிட்டிருப்பதால் ...

உத்தரகண்ட் சுரங்கத்தில் உயிருக்கு போராடும் 41 தொழிலாளர்கள்! அடுத்து என்ன?

டேராடூன் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவர்களை மீட்பதற்கான முக்கிய இடத்தை கண்டுபிடித்து உள்ளது மீட்புக்குழு. இமயமலை சூழ்ந்த உத்தரகாண்ட்...

விஸ்வபிரியா நிதி நிறுவனம் மற்றும் “சுபிக்ஷா” சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் சுப்பிரமணியனுக்கு 20 ஆண்டுகள் சிறை

சென்னை அடையாறு காந்தி நகரில், “விஸ்வபிரியா பைனான்ஸ் மற்றும் செக்யூரிட்டி பிரைவேட் லிமிடெட்” என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீடுகளுக்கு 11 சதவீதத்துக்கு மேல் வட்டி தருவதாக கூறியதை நம்பி, 500க்கும்...

ஐடி கம்பெனி வேலையை உதறிவிட்டு செருப்பு தைக்கும் தொழிலாளி

இந்திய பிரதமர் மிகவும் எளிமையானவர் என்று எல்லோருக்கும் தெரியும்? ஏழைப்பங்காளன், விளம்பரமே பிடிக்காதவர்? செருப்பு தைக்கும் தொழிலாளியுடன் எப்படி சகஜமாக பேசுகிறார் பாருங்கள். அந்த தொழிலாளி பேன்ட் சட்டை போட்டு கழுத்தில் டேக்(tag) மாட்டி...

Recent Comments