Tuesday, October 3, 2023
Home விளையாட்டு இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

இந்திய குத்துச்சண்டை வீரர் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

அம்மான்

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய மண்டல தகுதி சுற்று குத்துச்சண்டை போட்டி ஜோர்டான் தலைநகர் அம்மானில் நடந்தது. இதில் கடைசி நாளான நேற்று நடக்க இருந்த ஆண்களுக்கான 69 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன், ஜோர்டான் வீரர் ஜியாத் இஷாஷ்சை சந்திக்க இருந்தார்.

அரைஇறுதிசுற்றின் போது இடது கண் இமை பகுதியில் காயம் அடைந்த விகாஸ் கிருஷ்ணன் டாக்டர்கள் அறிவுறுத்தலின் பேரில் இறுதிப்போட்டியில் இருந்து விலகினார். இதனால் ஜியாத் இஷாஷ் களம் இறங்காமலேயே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். விகாஸ் கிருஷ்ணன் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

63 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் 4-1 என்ற கணக்கில் கடந்த காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் ஹாரிசன் கார்சிட்டை சாய்த்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அத்துடன் முந்தைய காமன்வெல்த் இறுதிப்போட்டியில் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தார். 81 கிலோ எடைப்பிரிவின் ‘பிளே-ஆப்’ சுற்றில் இந்தியாவின் சச்சின் குமார் 0-5 என்ற கணக்கில் தஜிகிஸ்தான் வீரர் ஷப்போஸ் நெக்மதுல்லோவிடம் தோல்வி கண்டு ஒலிம்பிக் வாய்ப்பை கோட்டை விட்டார்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு குத்துச்சண்டையில் இதுவரை இந்திய வீராங்கனைகள் மேரி கோம் (51 கிலோ), சிம்ரன்ஜித் கவுர் (60 கிலோ), லவ்லினா போர்கோஹைன் (69 கிலோ), பூஜா ராணி (75 கிலோ), வீரர்கள் அமித் பன்ஹால் (52 கிலோ), மனிஷ் கவுசிக் (63 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (69 கிலோ), ஆஷிஷ் குமார் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோ) ஆகிய 9 பேர் தகுதி பெற்றுள்ளனர்.

இந்தியாவில் இருந்து குத்துச்சண்டையில் ஒரு ஒலிம்பிக் போட்டிக்கு செல்லும் அதிகபட்ச வீரர், வீராங்கனைகள் எண்ணிக்கை இது தான். இதற்கு முன்பு 2012 ஆம் ஆண்டு லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு 8 இந்தியர்கள் தகுதி பெற்றதே அதிகபட்சமாக இருந்தது.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments