Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeவர்த்தகம்சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு

சில்லறை பணவீக்கம் 6.58% ஆக குறைவு

புதுடெல்லி

உணவு பொருட்கள் விலை குறைவால் நாட்டின் சில்லறை விலை பணவீக்கம் கடந்த பிப்ரவரியில், 6.58% ஆக குறைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் விஸ்வரூபம் எடுத்து ஆடி வந்த விலைவாசியால், சில்லறை பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

சொல்லப்போனால் இது கடந்த ஜனவரியில் 7.59% ஆக இருந்தது. இந்த நிலையில் கடந்த பிப்ரவரியில் விலைவாசி சற்று கட்டுக்குள் வந்தது, குறிப்பாக வெங்காயம் வரத்து, காய்கறிகளின் விலை குறைவு என அனைத்தும் இதற்கு கைகொடுத்தது என்றே கூறலாம்.

இது கடந்த ஜனவரி மாதத்தினை விட குறைந்திருந்தாலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இது அதிகம் தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமானால் இந்த விகிதம் கடந்த பிப்ரவரியில் 6.58% ஆக குறைந்துள்ளது. ஆனால் முந்தைய ஆண்டு பிப்ரவரியில், 2.57% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆக அந்த விகிதத்தின் படி பார்த்தால் இன்னும் இந்த விகிதம் குறைய வேண்டும்.

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் உணவு பொருட்களின் சில்லறை பணவீக்கம், கடந்த ஜனவரியில், 13.63% ஆக இருந்த நிலையில் பிப்ரவரியில், 10.81% ஆக குறைந்துள்ளது. அதிலும் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும், மத்திய அரசு குறிப்பிட்டதிலிருந்து அதிகரித்துள்ளது.

மத்திய அரசு ரிசர்வ் வங்கியை சில்லரை விலை பணவீக்கத்தை 4% வைத்திருக்கும் படி இலக்கு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தே காய்கறி விலை பணவீக்கம் ஜனவரி மாதத்தில் 50.19% இருந்ததில் இருந்து 31.61% ஆக குறைந்துள்ளது. அதே போல புரதம் நிறைந்த பருப்பு வகைகள் மற்றும் முட்டை வகைகள் விஷயத்திலும் விலை சற்று குறைந்துள்ளது.

எனினும் எரிபொருள் மற்றும் லைட் பிரிவில் பணவீக்கம் முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது கிட்டதட்ட இருமடங்கு அதிகரித்து 6.36% அதிகரித்துள்ளது. இது தான் இப்படி எனில் நுகர்வோர் விலை பணவீக்க வரம்பு தொடர்ந்து மூன்றாவது மாதமாக நிர்ணயித்த 6% இலக்கினை விட அதிகமாகவே உள்ளது. இது ஆகஸ்ட் 2019ல் இருந்து அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. எனினும் அதிர்ஷ்டவசமாக பிப்ரவரியில் 3.21% ஆக இருந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments