கெரான் பகுதி கட்டுப்பாட்டுக் கோட்டிலிருந்து ஊடுருவிய பயங்கரவாதக் குழுவிற்கும் இந்திய ராணுவ படைகளுக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகளின் மறைவிடத்தில் சோதனை போது, பாக்கிஸ்தானில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன. ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட 15 கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் பி.எஸ். ராஜு இதனை தெரிவித்தார்.
தீவிரவாதிகள் ஷம்சபரி எல்லையிலிருந்து இந்திய எல்லைக்குள் நுழைந்ததாகவும், போஸ்வால் பகுதியில் உள்ள “குஜ்ஜர் தோக்” (நாடோடிகளுக்கு தற்காலிக தங்குமிடம்) என்ற இடத்தில் பதுங்கி இருந்ததாகவும் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.