நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களை வைத்திருக்கும் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி இன்று கொரோனா மற்றும் ஊரடங்கு தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் ஊரடங்கை அரசு நீட்டித்தால், ஆட்சேபம் இல்லை என்று தெரிவித்துள்ளனர். மேலும், ஊரடங்கால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு கூடுதல் நிதியுதவி அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஊரடங்கு நீட்டிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மோடியும் அவர்களிடம் பேசியுள்ளார். கொரோனாவுக்கு எதிரான யுத்தம் நம்மை ஒன்றிணைத்துள்ளது. கொரோனா வந்தது முதல் வெளியேறுவது வரை நாம் போராட வேண்டியது இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.