Friday, March 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன்...

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இந்திய பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்புத் திட்டத்தை வகுக்க உள்ளது மோடி தலைமையிலான அரசு.

இந்த முக்கியமான அறிவிப்பைச் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணிக்கு மோடி வீடியோ வாயிலாகப் பேசும் போது பிரதமர்  அறிவித்தார். இந்த 20 லட்சம் கோடி ரூபாய் திட்டத்தில், சமீப காலத்தில் அறிவிக்கப்பட்ட முக்கியத் துறைகளுக்கான ஊக்குவிப்பு மற்றும் ரிசர்வ் வங்கி அறிவிக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளும் அடங்கும் எனத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. மேலும் இத்திட்டம் Aatmanirbhar Bharat என்ற பெயரில் இயங்க உள்ளதாகவும் மோடி அறிவித்துள்ளார்

இதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் உடன் 4வது முறையாக மீண்டும் ஊரடங்கு நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், இதுகுறித்த விரிவான அறிவிப்புகள் மே 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என மோடி அறிவித்துள்ளார்.

ஆனால் மாதாந்திர கடன் தவணை தளர்வுக்கு, வட்டி இல்லை என்பது பற்றி பிரதமர் எதுவும் அறிவிக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments