Friday, April 26, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாசிறுகுறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் - நிர்மலா சீதாராமன்

சிறுகுறு தொழில்களுக்கு ரூ.3 லட்சம் கோடி கடன் – நிர்மலா சீதாராமன்

புதுடில்லி

ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறுகுறு தொழில்களுக்கு உதவும் வகையில் பிணையில்லாமல் ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:

விரிவான தொலைநோக்கு திட்டத்தை பிரதமர் நேற்று அறிவித்திருக்கிறார். பல்வேறு அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனை செய்ததின் அடிப்படையில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. சுயசார்பு பாரதம் என்ற பெயரில் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இந்தியா சுயசார்பு நிலையை எட்டுவதற்கான நோக்கத்துடன் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.

பொருளாதாரம், உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், மனிதவளம் மற்றும் தேவை ஆகியவை வளர்ச்சியின் தூண்கள்.இந்த 5 அம்ச நோக்கங்களுடன் பொருளாதார வளர்ச்சி சிறப்பு திட்டங்கள் கவனம் செலுத்தப்படுகின்றன. 5 அம்ச திட்டங்களுடன் 20 லட்சம் கோடியிலான தன்னிறைவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. சிறப்பு திட்டங்கள் மூலம், இந்தியா தன்னிறைவு பெறுவதுடன் உலகத்திற்கு உதவுவதாக இருக்கும்.

அதிகளவில் உள்ளூர் பொருட்கள் உற்பத்தி செய்வதே தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கமாக இருக்கும். உள்ளூர் பொரு்ட்களை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்க தன்னிறைவு இந்தியா திட்டம் உதவும். பிபிஇ கிட்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பொருட்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. தன்னிறைவை எட்டியுள்ளது.

உள்ளூர் பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்பதை பிரதமர் அடிப்படையாக தெரிவித்துள்ளார். தொழில்கள் நடத்துவது எளிதாக்கப்படும். உள்ளூர் நிறுவனங்களை உலகளாவிய நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் நோக்கம். அதிகளவில் உள்ளூர் பொருட்களை உற்பத்தி செய்வதே தன்னிறைவு இந்தியா திட்டத்தின் நோக்கம்.

இந்திய வர்த்தக பொருட்கள் சர்வதேச அளவில் கொண்டு செல்லப்படும். ஜன்தன், ஆதார் மூலம் பயனாளிகளுக்கு நிவாரணம் நேரடியாக செல்வதன் மூலம் புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது.அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு உதவியுள்ளன. ஊரடங்கால், ஏழைகள், வெளிமாநில தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை மத்திய அரசு உணர்ந்துள்ளது.

மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது.பிரதான் மந்திரி கிசான் திட்டம் நேரடியாக ஏழைகளுக்கு பண உதவி செலுத்தப்பட்டது. ஊரடங்ககு காலத்தில் மிகவும் உதவியது. நேரடி மானிய திட்டம் மக்களுக்கு உதவியாக உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. நெருக்கடியில் தான் தேவைகளை பூர்த்தி செய்ய கற்று கொள்கிறோம். இந்தியா சுயபலத்துடன் செயல்படும் நோக்கத்திலேயே சுயசார்பு உற்பத்தியை பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்சா்ரபு இந்தியா என்றால், உலகத்திடம் இருந்து துண்டித்து கொள்வதல்ல. தன்னம்பிக்கையை அதிகரிப்பது. 41 கோடி பயனாளர்களுக்கு ரூ.52 ஆயிரம் கோடி மதிப்பிலான நிவாரண உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டன. நேரடியாக பண உதவி அளிக்கப்பட்டது வெளிமாநில தொழிலாளர்களுக்கு உதவியாக இருந்தது. 6.5 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கு 71 ஆயிரம் டன் உணவு பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

20 லட்சம் கோடிக்கான திட்டங்களை அடுத்த சில நாட்களில் தொடர்ச்சியாக அறிவிப்போம். இன்று 15 அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சிறுகுறு நிறுவனங்களுக்கு இன்று 6 சலுகைகள் அறிவிக்கப்படுகின்றன. சிறுகுறு தொழில்களுக்கு பிணையின்றி ரூ.3 லட்சம் கோடி கடன் வழங்கப்படும். இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பயன்பெறும். இந்த திட்டம் அக்., 31 வரை செயல்படுத்தப்படும். 45 லட்சம் சிறுகுறு தொழிற்சாலைகள் பயனடையும்

4 ஆண்டுகளில் கடனை திருப்பி செலுத்தலாம். முதல் ஒராண்டு காலம் கடன் தவணை வசூலிக்கப்படாது. புதிய கடன் பெற சொத்து பத்திரம் எதுவும் செலுத்த தேவையில்லை. நலிவடைந்த தொழிற்சாலைகளுக்கு ரூ.25 ஆயிரம் கோடி. வாராக்கடன் பட்டியலில் உள்ள நிறுவனங்கள் கடன் பெற அரசு உதவி செய்யும். உத்தரவாதம் அளிப்பதற்காக தனியாக ஒரு நிதி ஒதுக்கப்படும்.

குறுந்தொழில் முதலீட்டு வரம்பு ரூ.25 லட்ச ரூபாயில் இருந்து ரூ.1 கோடியாக உயர்த்தப்படுகிறது. நடுத்தர நிறுவனங்களுக்கான வரம்பு ரூ.10 கோடியில் இருந்து ரூ.20 கோடி ஆகவும், சிறு தொழில் முதலீட்டு வரம்பு ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாகவும் அதிகரிக்கப்படுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments