Wednesday, January 8, 2025
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஆன்மீகம்நாகூர் தர்கா தற்காலிக நிர்வாகம் நீக்கம் - நிரந்தர நிர்வாகம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு

நாகூர் தர்கா தற்காலிக நிர்வாகம் நீக்கம் – நிரந்தர நிர்வாகம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு

உலகப்புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது. ஜாதி மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் வந்து வணங்கி செல்லும் இடமாக நாகூர் தர்கா விளங்கி வருகிறது. நாகூர் தர்காவிற்க்கென தனியாக ஸ்கீம் உள்ளது. அதன்படி நாகூர் தர்கா நிர்வாகம் இன்றளவும் இயங்கி வருகிறது. நாகூர் தர்காவிற்க்கான அறங்காவலர் குழு மற்றும் அட்வைசரி குழு என இரண்டு அமைப்புகள் உள்ளது. இதில் அட்வைசரி குழு பொருளாதாரம் மற்றும் ஆலோசனைகளை உள்ளடக்கியது. நிர்வாகம் மற்றும் கிரியைகளை அறங்காவலர் குழு செய்து வரும்.

நாகூர் தர்கா நிர்வாகம் எட்டு அறங்காவலர்களை உள்ளடக்கியது. 8வது அறங்காவலாராக இருந்த ஹஜ்ரத் ஹாஜா வஞ்சுர் பக்கிர் (எ) சின்னதம்பி சாஹிப் நேரடி வாரிசின்றி கடந்த 04.12.2013 அன்று இறந்துவிட்டார். அன்னாரின் இடத்துக்கு அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் உள்ளிட்ட பலர் போட்டியிட்டனர்.  இந்நிலையில் வாரிசுதாரர்கள் பலரும் நீதிமன்றத்தில் முறையிட்டனர்.  

இந்த தருணத்தில் கடந்த 2016ம் ஆண்டு தலைமை அறங்காவலர் பதவி காலம் முடிந்ததமையால்,  எட்டாவது அறங்காவலர் இல்லாத காரணத்தினால் தலைமை அறங்காவலர் தேர்தல் நடத்த முடியாமல் போனது. அதனை கருத்தில் கொண்டு, சென்னை நீதிமன்றம் நாகூர் தர்காவை நிர்வாகிக்க அலாவுதீன் இ.ஆ.ப (ஓய்வு) மற்றும் அக்பர் (மாவட்ட நீதிபதி ஓய்வு) ஆகியோரை உள்ளடக்கிய இடைக்கால குழுவினரை நியமித்து, அவர்கள் நாகூர் தர்காவை கடந்த 10.02.2017 முதல் நிர்வாகித்து வந்தனர். வருடா வருடம் நாகூர் தர்கா கந்தூரி சமயத்தில் புனித கிரியைகள் செய்ய உயர் நீதிமன்றம் நேரடியாக உத்தரவு வழங்கியும் வந்தது.  

அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் சார்பில், மூத்த வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தி நீதிமன்றத்தில் வாதாடினார். அன்னாரின் கூற்றுப்படி சமரச கமிட்டி அமைக்க நீதிமன்றம் இசைந்தது. சமரச கமிட்டியில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கலீபுல்லா, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பாஷா, உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அக்பர் அலி தலைமையில் சமரச கமிட்டி அமைத்து இதற்கு தீர்வு காணப்பட்டது.

அதன்படி முதல் எட்டாவது அறங்காவலாராக அல்ஹாஜ் செய்யது காமில் சாஹிப் நியமிக்கபட்டார். பின்னர் சுழற்சி முறையில் சுல்தான் கலீபா சாஹிப், ஹாஜா நஜ்மூதின் சாஹிப் மற்றும் செய்யது யூசுப் சாஹிப் இருக்க சமரசமாக ஓப்புக்கொள்ளப்பட்டது. பின்னர் இந்த வழக்கு கடந்த வாரம் நீதிபதி சிவஞானம் அமர்வில் விசாரனைக்கு வந்தது. எட்டாவது அறங்காவலர் விஷயம் முடிவுக்கு வந்துவிட்டபடியால் நாகை நீதிமன்றத்தில் உள்ள வாரிசு வழக்கு வாபஸ் முடிவு எட்டப்பட்டவுடன் நாகூர் தர்கா தற்காலிக நிர்வாகம் நீக்கப்படுவதாகவும், உடனே பிரசிடண்ட் கலீபா சாஹிப் தலைமையில் இயங்கிய அட்வைசரி போர்டு அமைந்துவிடும் என்றும் எட்டாம் அறங்காவலரையும் இணைத்து அறங்காவலர்களுக்குள் நாகூர் தர்காவிற்க்கு புதிய மானேஜிங் டிரஸ்டி ஸ்கீம் படி தேர்வு செய்யப்பட வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார். வரும் ஜனவரியில் துவங்க இருக்கும் நாகூர் தர்கா கந்தூரியை அறங்காவலர் குழு சிறப்பாக நடத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனால் கடந்த ஆறு வருடங்களாக நிலுவையில் இருந்த நாகூர் தர்கா நிர்வாக வழக்கு முடிவுக்கு வந்தது.  மேலும் மிகவும் திறன்பட செயல்பட்டு சமரச கமிட்டி மற்றும் நாகூர் தர்கா விஷயத்தில் நல்ல தீர்வை கண்ட சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஹாஜா மெய்தீன் கிஸ்தியை நீதிபதி பாரட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments