Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஅந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்

அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா திட்டம்

போர்ட் பிளேர்

அந்தமான் பகுதியில் ராணுவ உள்கட்டைமைப்புகளை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா உள்ளது.

572 தீவுக்கூட்டங்கள் அடங்கிய அந்தமான்-நிகோபார் பன்னாட்டுக் கடல் வழித்தடங்களின் அருகில் உள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து சீனாவுக்கு எண்ணெய் கப்பல்கள் அந்தமான் தீவுகள் வழியாகத்தான் செல்கின்றன.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த தீவுப் பகுதியில் “அந்தமான் நிகோபார் கமாண்ட்” என்கிற படைப்பிரிவு 2001-ம் ஆண்டு துவங்கப்பட்டது. இது தரைப்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்த படைப்பிரிவாக விளங்குகிறது.

இந்த படைப்பிரிவை விரிவாக்கும் திட்டம் ஏற்கனவே இருந்த போதிலும் போதிய நிதி ஒதுக்கப்படாததாலும், சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காததாலும் அத்திட்டம் நிலுவையில் இருந்து வந்தது.

இந்நிலையில் லடாக்கில் சீனாவுடன் மோதலுக்குப் பின் அந்தமானில் ராணுவ உள்கட்டமைப்பை மேம்படுத்தும் திட்டத்தில் இந்தியா இறங்கி உள்ளது. பெரிய விமானங்கள் தரையிறங்கும் வகையில் கோகாசா, பாஸ் ஆகிய இடங்களில் கடற்படை விமான தளங்களில் உள்ள ஓடு பாதையை 10,000 அடி நீளத்திற்கு விரிவாக்கம் செய்ய நில ஒதுக்கீடும், அனுமதியும் தற்போது உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ 5,650 கோடி மதிப்பீட்டில் வரும் 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பு திட்டத்தை மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும் கமோர்த்தா தீவில் 10,000 அடி நீள ஓடுபாதையுடன் கூடிய விமான தளம் அமைப்பதும் இதில் அடங்கும்.

இத்திட்டம் 2027 ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்பபடுகிறது. இதன் மூலம் கூடுதல் விமானங்கள், போர்க்கப்பல்கள் ஏவுகணைகள் ஆகியவற்றுடன் கூடுதல் எண்ணிக்கையில் படைவீரர்களையும் அங்கு தங்க வைக்க முடியும். இத்திட்டத்தால் இந்தியப் பெருங்கடல் மண்டலத்தில் இந்தியா தனது மேலாண்மையை நிறுவ முடியும். இது சீனாவின் நடவடிக்கைக்கு தடையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments