Thursday, April 18, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பே இல்லை - நிபுணர்கள் கருத்து

ஆகஸ்ட் 15க்குள் கொரோனா தடுப்பூசி வெளியாக வாய்ப்பே இல்லை – நிபுணர்கள் கருத்து

டெல்லி

ஆகஸ்ட் 15ம் தேதிக்குள், கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை பொது சுகாதார பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்ய உள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர் அறிவிப்பு வெளியிட்டது. ஆனால், இது “முற்றிலும் நம்பத்தகாதது, முற்றிலும் சாத்தியமற்றது” என்று சில மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த, பாரத் பயோடெக் உருவாக்கிய தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ஐ.சி.எம்.ஆர் இயக்குநர் ஜெனரல் பால்ராம் பார்கவா கடிதம் எழுதியுள்ளார்.

அதில், “பொது சுகாதார அவசரத்தை கருத்தில் கொண்டு” தடுப்பூசி டிரையலை தொடங்குவது விரைவாக்கப்படும் என்று கூறியுள்ளார். மருத்துவ பரிசோதனையைத் தொடங்குவது தொடர்பான அனைத்து ஒப்புதல்களையும் விரைவாகக் கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

நோயெதிர்ப்பு நிபுணரும், புனேவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் (ஐ.ஐ.எஸ்.இ.ஆர்) வருகை பேராசிரியருமான வினீதா பால் இதுபற்றி கூறுகையில், இன்னும் சோதனைக்கு உட்பட்டுள்ள தடுப்பூசி இவ்வளவு சீக்கிரம் எவ்வாறு தயாராகும் என்பதை தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். ஆகஸ்ட் 15 என்பது முற்றிலும் நம்பத்தகாத இலக்கு. இவ்வளவு வேகமாக தயாரான தடுப்பூசி எதுவும் இல்லை. இதில் பல செயல்முறைகள் உள்ளன. அவசரகால சூழ்நிலையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு வேகமாக தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது என்று வைத்துக் கொண்டாலும், ஆகஸ்ட் 15 காலக்கெடு முற்றிலும் நம்பத்தகாததாகத் தோன்றுகிறது, முற்றிலும் சாத்தியமற்றது” என்றார்.

பயோடெக் துறையில் பணிபுரியும் அனந்த் பன், கூறுகையில், மருத்துவ பரிசோதனைகளின் வெற்றியை ஐ.சி.எம்.ஆர் முன்கூட்டியே தீர்மானித்திருக்கிறதா என்று ஆச்சரியப்படுகிறார். ஐ.சி.எம்.ஆரின் கடிதத்தின்படி, டிரையல் இன்னும் நடந்து கொண்டிருக்கும் ஒரு தடுப்பூசிக்கு, ஜூலை 7 முதல் மருத்துவ சோதனை நடத்த ஆட்சேர்ப்பு எவ்வாறு தொடங்கப்படும்? ஆகஸ்ட் 15 ஆம் தேதி தடுப்பூசி எப்படி அறிவிக்கப்படும்? ஒரு தடுப்பூசி சோதனை ஒரு மாதத்திற்குள் முடிவதும், செயல்திறன் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதும் சாத்தியமில்லாத விஷயம் என்று தெரிவித்துள்ளார்.

வழக்கமாக, இந்த சோதனைகள் பல மாதங்கள் இழுக்கும். மூன்றாம் கட்ட சோதனைகளைத் தொடர்ந்து செய்ய வேண்டும், தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி கொடுத்து, நோய்க்கான அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி கண்காணிக்கப்படும். மருத்துவ சோதனைகள் தரவு பகுப்பாய்வு மற்றும் சரிபார்ப்பைப் பின்பற்ற வேண்டும். ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்ட பத்திரிகையில் இந்த தடுப்பூசி குறித்த தகவல் வெளியிடப்பட வேண்டும். இவ்வளவு வேலைகள் இருக்கும்போது, ஆகஸ்ட் 15ம் தேதி தடுப்பூசி வெளியாகும் என்று ஐ.சி.எம்.ஆர் தேதி குறித்தது எப்படி என்று அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments