Wednesday, March 29, 2023
Home தமிழகம் சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் 5 போலீசாரையும் 3 நாட்கள் சி.பி.ஐ காவலில்...

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் 5 போலீசாரையும் 3 நாட்கள் சி.பி.ஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

தூத்துக்குடி

சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆரம்பத்தில் சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ கொலை வழக்காக மாற்றியுள்ளது. மேலும், உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் முதல் குற்றவாளி என இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ளார்.

அவர்களிடம் விசாரணை மேற்கொள்ள காவலில் எடுக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சி.பி.ஐ அனுமதி கேட்டிருந்தது. ஆனால், விசாரணைக்கு உடன்படாத 5 பேரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து வாதாடிய சி.பி.ஐ தரப்பு, 5 போரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி பெற்றது.

இந்நிலையில், விசாரணையின் போது 5 போலீசாரையும் மன அழுத்தம் ஏற்படும்படி விசாரணை மேற்கொள்ள கூடாது எனவும், காவலர்களை தாக்கி துன்புறுத்தக்கூடாது என மதுரை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த் குமார் உத்தரவிட்டுள்ளார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments