Tuesday, September 10, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeகட்டுரைகொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

கொழும்பு துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை வெளியேற்றுகிறதா இலங்கை?

ஈரானின் சபாஹர் துறைமுக ரயில் திட்டத்தில் இருந்து இந்தியா விலக்கப்பட்டதை போல கொழும்பு துறைமுக திட்டத்திலும் இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கிறது.

ஈரானின் சபாஹர் துறைமுகத்தை இந்தியாவும் , அதற்கு அருகே பாகிஸ்தானின் கவ்தார் துறைமுகத்தை சீனாவும் தங்கள் வசமாக்கின. இதன் மூலமாக மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எண்ணெய் வழிப்பாதையை இருநாடுகளும் தங்களுக்கு சாதகமாக மாற்றும் நடவடிக்கையை மேற்கொண்டன.

ஆனால் காலப்போக்கில் ஈரானும் சீனாவும் நெருக்கமான உறவை மேற்கொள்ள தொடங்கின. இன்னொருபக்கம் இந்தியாவோ, அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுடனான நட்புறவில் தேக்க நிலையை உருவாக்கிக் கொண்டது. இதனால் சபாஹர் துறைமுக திட்டத்தில் இருந்து இந்தியாவை விலக்குவது என ஈரான் முடிவு செய்திருக்கிறது. இது இந்தியாவுக்கு மிகப் பெரிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையின் கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனைய திட்டத்தை இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயக்படுத்துவதற்கு கடும் நெருக்கடி எழுந்துள்ளது. இதனால் இந்த திட்டத்தில் இருந்தும் இந்தியா வெளியேற்றப்படுகிற நிலை உருவாகி உள்ளது.

இலங்கையில் நாடாளுமன்ற தேர்தல் நடபெறும் நிலையில் அரசியல் ஆதாயத்துக்காக இலங்கை அரசு இத்தகைய அறிவிப்பை எந்த நேரத்திலும் வெளியிடவும் கூடும் எனவும் கூறப்படுகிறது. இது தெற்காசிய பிராந்திய வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு இன்னொரு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments