Friday, April 19, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeஇந்தியாபா.ஜ.க அல்லாத முதல்வர்கள் மாநாடு - கொள்கையை உருவாக்க ஐவர் குழு

பா.ஜ.க அல்லாத முதல்வர்கள் மாநாடு – கொள்கையை உருவாக்க ஐவர் குழு

டெல்லி

பாரதிய ஜனதா அல்லாத முதல்வர்கள் மாநாடு, மத்திய அரசின் சட்டங்களை உருவாக்க ஐவர் குழு என அடுத்தடுத்து புதிய பாய்ச்சலுக்கு தயாராகிவிட்டதை காங்கிரஸ் கட்சி வெளிப்படுத்தி வருகிறது.

லோக்சபா தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். அவருக்குப் பதில் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பதவியேற்றார். கடந்த ஓராண்டு காலத்தில் காங்கிரஸ் கட்சி, பா.ஜ.கவின் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் பெரிதாக எதிர்வினை எதனையும் வெளிப்படுத்தியது இல்லை.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்த போது காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே என்கிற ஆதங்கம் அந்த கட்சியினருக்கே இருக்கிறது. குலாம்நபி ஆசாத் போன்ற காங்கிரஸ் மூத்த தலைவர்களே இந்த விவகாரத்தில் கட்சி மேலிடம் மீது அதிருப்தியாக இருக்கின்றனர்.

இதேபோல் மத்திய பிரதேசத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பறிகொடுத்த போதும் கூட காங்கிரஸ் மேலிடம் உருப்படியான எந்த நகர்வையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க அதிகாரத்தை கைப்பற்றியது. இப்படி பல்வேறு விஷயங்களில் காங்கிரஸ் கட்சி மெத்தனப் போக்கையே கடைபிடித்த நிலையில்தான் 23 மூத்த தலைவர்கள் கட்சி மேலிடத்துக்கு குமுறல் கடிதத்தை அனுப்பினர்.

இதுதான் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் பெரும் பூகம்பமாக வெடித்தது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் 23 தலைவர்களின் கடிதத்தை தொடக்கத்தில் வெறுப்புடன் பார்த்தபோதும் அதில் உள்ள நியாயங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை அடுத்தடுத்து நிகழ்வுகள் வெளிப்படுத்துகின்றன. காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் முடிந்த கையோடு அதிருப்தியாளர்களில் மூத்த தலைவரான குலாம்நபி ஆசாத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தினர் சோனியா- ராகுல்.

பின்னர் நீட். ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, புதிய கல்வி கொள்கை ஆகியவை தொடர்பாக பா.ஜ.க அல்லாத 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் சோனியா காந்தி மிக முக்கியத்துவம் வாய்ந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் ஜெகன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பங்கேற்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சி முதல்வர்களை ஒருங்கிணைக்கும் முயற்சியில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த முதல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இந்த முதல்வர்களின் கூட்டம் அணிசேர காத்திருக்கும் பிற கட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments