Friday, April 12, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அமைச்சர் உடுமலை iராதாகிரூஷ்ணன் உதவியாளர் காரில் கடத்திய விவகாரத்தில் ஏழு பேர் கைது. சொகுசு கார்...

அமைச்சர் உடுமலை iராதாகிரூஷ்ணன் உதவியாளர் காரில் கடத்திய விவகாரத்தில் ஏழு பேர் கைது. சொகுசு கார் பறிமுதல்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பட்டபகலில் அமைச்சர் உடுமலை கே.ராதாகிரூஷ்ணன் உதவியாளர் காரில் கடத்திய விவகாரத்தில் ஏழு பேர் கைது. சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருப்பவர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் இவர் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சராக இருந்து வருகிறார் இவரது அரசியல் உதவியாளராக கர்ணன் என்பவர் கடந்த 7 ஆண்டாக பணியாற்றி வருகிறார் இந்நிலையில் கடந்த 23 ஆம் தேதி அன்று உடுமலை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பணியிலிருந்த கர்ணனை ஐந்து பேர் கொண்ட மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற நிலையில் சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் திருப்பூர் ,கோவை ,திண்டுக்கல் மாவட்ட எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர் இதனால் கடத்தல் கும்பல் உடுமலை அருகே உள்ள மொடக்குப்பட்டி பிரிவு என்ற பகுதியில் கர்ணனை இறக்கி விட்டு தப்பிச் சென்றது இதனை அடுத்து திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திஷாமிட்டல் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் இதனையடுத்து இன்று ஏழு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் தப்பிச் சென்ற ஒருவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் இதில் முக்கிய குற்றவாளியாக பிரதீப் என்பவர் கர்ணனிடம் பணம் பறிக்கலாம் என்ற நோக்கத்தோடு திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது இவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்ட பிரதீப் அதிமுக கட்சியில் உறுப்பினராக இருந்து பல்வேறு பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார் இவர் கடத்தப்பட்ட கர்ணனுக்கு நன்கு பழக்கமானவர் கர்ணனிடம் பணம் அதிகமாக உள்ளது இதை அபகரிக்கலாம் என்ற நோக்கத்தோடு திட்டம் தீட்டி அதற்காக கூலிப்படைகளை வரவழைத்து இந்த கடத்தலை நடத்தியுள்ளார் மேலும் கர்ணனை கடத்தி பிரதீப் அவர்களின் உறவினர் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான பட்டுப்பூச்சி வளர்ப்பு குடோனில் அடைத்து வைத்துள்ளனர் தற்பொழுது தேவராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்

இதனைத்தொடர்ந்து கூலிப்படையாக செயல்பட்ட பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வினோத், செல்வகணபதி, தாஹா மற்றும் உடுமலையை சேர்ந்த அருண்குமார், சுரேந்திரன் ஆகிய 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் மேலும் தப்பியோடிய ரகு என்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் கடத்தலுக்கு உதவிய சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது கால்நடைத்துறை பராமரிப்புதுறை அமைச்சர் உடுமலை கே.ராதா கிருஷ்ணன் உதவியாளரை பட்டப்பகலில் காரில் கடத்திய சம்பவம் உடுமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அதிமுக பிரமுகர் ஓருவர் அமைச்சர் உதவியாளரை கடத்தியது அமைச்சருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது அதிமுகவை சேர்ந்த ஒருவர் அதிமுக அமைச்சரின் உதவியாளர் கடத்திய சம்பவம் அதிமுக உறுப்பினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினால் அது மிகையாகது.கைது செய்யப்ட்ட அனைவரும் உடுமலை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments