Thursday, March 28, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
HomeUncategorizedமஹிந்திரா நிறுவன 75-வது ஆண்டு விழாவில் புதிய "தார்" எஸ்.யூ.வி வாகனம் அறிமுகம்

மஹிந்திரா நிறுவன 75-வது ஆண்டு விழாவில் புதிய “தார்” எஸ்.யூ.வி வாகனம் அறிமுகம்

மஹிந்திரா நிறுவனம் தனது 75-வது ஆண்டு விழாவை ஒட்டி புதிய ‘தார்’ எஸ்.யூ.வி வாகனத்தை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

செயல்பாடு, வசதி, தொழில்நுட்பம், பாதுகாப்புக்கு பெயர் பெற்ற மற்றும் நீண்ட காலமாக பலரால் எதிர்பார்க்கப்பட்ட ‘தார்’ எஸ்.யூ.வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஏ.எக்ஸ் மற்றும் எல்.எக்ஸ் என்ற 2 வகைகளில், ரூ.9.80 லட்சம் முதல் ரூ.12.49 லட்சம் வரையிலான ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

இப்புதிய வாகனம் பிஎஸ்-6 புகை உமிழ்வு விதிகளின்படி தயாரிக்கப்பட்டுள்ளது. 2.0 லிட்டர் பெட்ரோல் அல்லது 2.2 லிட்டர் டீசல் இன்ஜின், 6 கியர் மேனுவல், ஆட்டோமேடிக் வகைகளில் வெளியாகியுள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மாற்றக்கூடிய வகையிலும், கடினமான மற்றும் மென்மையான வகையிலும் கிடைக்கிறது.

எதிர்புறம் பார்த்த மாதிரியான 4 சீட் அமைப்பு மற்றும் 2 பக்கவாட்டு சீட் அமைப்புடன் உள்ளது. தொடுதிரையுடன் கூடிய 17.7 செ.மீ. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மேலே பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் போன்ற வசதிகளும், ஏ.பி.எஸ், ஈ.பி.டி, 2 காற்றுப் பைகள், ஹில் ஹோல்ட் போன்ற பாதுகாப்பு வசதிகளும் இதில் உள்ளன.

இந்த எஸ்.யூ.வி-க்கான புக்கிங் நேற்று தொடங்கியுள்ளது. https://auto.mahindra.com/buy/book-online?mgc=THRN என்ற இணையதளம் மூலமும் அருகில் உள்ள மஹிந்திரா டீலர்களிடமும் ரூ.21 ஆயிரம் முன்பணமாகச் செலுத்தி வாகனத்தை முன்பதிவு செய்யலாம். நவம்பர் 1-ம் தேதிமுதல் டெலிவரி கிடைக்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments