Wednesday, June 7, 2023
Home தமிழகம் மூளை வளர்ச்சி இல்லாத காங்கிரஸ் கட்சி - போலீசில் புகார் கொடுத்ததால் வருத்தம் தெரிவித்த குஷ்பு

மூளை வளர்ச்சி இல்லாத காங்கிரஸ் கட்சி – போலீசில் புகார் கொடுத்ததால் வருத்தம் தெரிவித்த குஷ்பு

சென்னை

காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சித்தது விஸ்வரூபமானதால் நடிகை குஷ்பு தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் கடந்த வாரம் வரை இருந்தவர் நடிகை குஷ்பு. திடீரென காங்கிரஸில் இருந்து பா.ஜ.க வுக்கு தாவி விட்ட குஷ்பு, டெல்லியில் பா.ஜ.க பொதுச் செயலாளர் சிடி. ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

பின்னர், சென்னைக்கு வந்த குஷ்பு பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க மூத்த தலைவர்களை அதிரவைக்கும் வகையில் “நான் ஒரு பெரியாரிஸ்ட்” என பிரகடனம் செய்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என சாடினார் குஷ்பு. குஷ்புவின் இந்த விமர்சனம், மாற்றுத் திறனாளிகளை கோபம் கொள்ள வைத்தது. இதனையடுத்து நடிகை குஷ்பு மீது தமிழகத்தின் பல போலீஸ் நிலையங்களிலும் புகார் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து குஷ்பு தாம் அப்படி பேசியதற்காக வருத்தம் தெரிவித்திருக்கிறார். மேலும் ஆழ்ந்த துயரத்தையும் வேதனையும் தருவதாகவும், அவசரத்தில் இந்த சொற்றொடர்கள் பயன்படுத்தப்பட்டு விட்டதாகவும் குஷ்பு கூறியுள்ளார்.

- Advertisment -

Most Popular

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

ஒடிசா ரயில் விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் விடிய விடிய நடைபெற்றநிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 35 பேர் உட்பட மொத்தம் 280 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள்...

டெல்லியின் உரிமையை காக்க மக்கள் அனைவரும் பேரணியில் கலந்து கொண்டு எதிர்ப்பை காட்ட வேண்டும் – கெஜ்ரிவால்

டெல்லி நிர்வாக சேவை தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசாணைக்கு எதிராக ஜூன் 11ம் தேதி மாபெரும் பேரணி நடத்தப்போவதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் வகையில்...

நாடாளுமன்றப் புதிய கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிக்கிறோம் – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் தலைவரான குடியரசுத் தலைவரை அழைக்காமல் அவரை அவமதிக்கும் வகையில் நடைபெறும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவைப் புறக்கணிப்பது...

2000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு மோடி அரசின் பொருளாதார சீர்குலைவு நடவடிக்கையின் உச்சகட்டம் – திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அவற்றை மாற்றிக் கொள்ளலாம் என்றும் மோடி அரசு அறிவித்திருக்கிறது. அதுவரை அவற்றைக்...

Recent Comments