Wednesday, March 29, 2023
Home விளையாட்டு ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் - டேவிட் வார்னர்

ஐபிஎல் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் – டேவிட் வார்னர்

அபுதாபி

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் 35வது ஆட்டத்தில் டேவிட் வார்னர் தலைமையிலான ஜதராபாத் சன்ரைசர்ஸ் அணியும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது.

164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. முடிவில் ஐதராபாத் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

எனினும், இறுதி வரையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் 5 பவுண்டரிகளுடன் 47 (33) ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்ததுடன் சாதனையும் படைத்துள்ளார்.

இந்த போட்டியில் டேவிட் வார்னர் 5 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார். அவருக்கு முன் விராட் கோலி (5,759), ரெய்னா (5,368) மற்றும் ரோகித் சர்மா (5,149) ஆகியோர் முதல் 3 இடங்களில் உள்ளனர். வார்னர் மற்ற வீரர்களை விட குறைவான போட்டிகளில் விளையாடி (135), அதிவேகமாக 5 ஆயிரம் ரன்கள் என்ற இலக்கை கடந்துள்ளார். இதேபோல், ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற பெருமையையும் டேவிட் வார்னர் பெற்றுள்ளார்.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments