Tuesday, March 21, 2023
Home இந்தியா பீகார் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடக்கம்

பீகார் சட்டசபை தேர்தல் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை தொடக்கம்

பாட்னா

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளுக்கு எதிரான தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த சூழலில் பீகார் சட்டசபை தேர்தலுக்கான 3 கட்ட வாக்கு பதிவில் முதற்கட்ட வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

இந்த தேர்தலில் 114 பெண்கள் உள்பட 1,066 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 71 தொகுதிகளுக்கு நடைபெறும் முதற்கட்ட வாக்கு பதிவில் முதல் மந்திரி நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் உள்ள 6 மந்திரிகளின் அரசியல் எதிர்காலம் நிர்ணயம் செய்யப்படும்.

3 கட்ட வாக்கு பதிவை முன்னிட்டு பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய அரசு 30 ஆயிரம் மத்திய பாதுகாப்பு படை வீரர்களை குவித்து உள்ளது. மாவோயிஸ்டுகள் அதிகமுள்ள தொகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான பல்வேறு விதிமுறைகளும் வகுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டு உள்ளன. 7 லட்சம் சேனிடைசர்கள், 46 லட்சம் மாஸ்குகள், 6 லட்சம் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள், 6.7 லட்சம் முக கவசங்கள், 23 லட்சம் ஜோடி கையுறைகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. இந்த தேர்தலில் 2 கோடி பொதுமக்கள் வாக்களிக்கின்றனர்.

இதுதவிர 80 வயது கடந்த மூத்த குடிமக்கள் அல்லது மாற்று திறனாளிகள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டு நடைமுறையும் உள்ளது. இதன்படி, 52 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர் என தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

- Advertisment -

Most Popular

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெண் காவலர்களுக்கு நவரத்தின அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவை வருமாறு: 1. ரோல் கால் காலை 7 மணிக்கு பதிலாக 8 மணிக்கு மாற்றம். 2. பெண் காவலர்களுக்கு தங்கும் விடுதி. 3. காவல் நிலையங்களில்...

நாடு முழுவதும் உயர்கிறது சுங்கக்கட்டணம்

நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் உயர்கிறது. இந்த கட்டண உயர்வால் லாரி வாடகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம் உள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தை சேர்ந்தவர் ஆஸ்திரேலியாவில் போலீசாரால் சுடப்பட்டார்

சிட்னி தமிழகத்தை சேர்ந்த முகமது சையது அகமது என்பவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். சிட்னியின் ஆபர்ன் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணியாளரை முகமது சையது கத்தியால் தாக்கியதாக போலீஸ் தகவல்...

Recent Comments