கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வே நாயக் மரண வழக்கில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.
கட்டட உட்புற வடிவமைப்பாளர் அன்வே நாயக் 2018-ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தொடர்புடையதாக அர்னாப் கோஸ்வாமியின் வீட்டிற்கு சென்று மும்பை போலீசார் அவரை இந்த வழக்கில் கைது செய்தனர். ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் அர்னாப் முறையிட்டார். அவரின் ஜாமினை மும்பை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.
இதனை எதிர்த்து அர்னாப் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சந்திரசூட் அமர்வு ஜாமின் மனுவை புதன்கிழமை விசாரித்தது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், மாநில அரசுகள் சட்டத்தை மீறும்போது உச்சநீதிமன்றம் அதனை தடுக்கும் என்று கூறினர். உயர்நீதிமன்றங்கள் தங்கள் கடமைகளை செய்வதில்லை என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.