கோவை
நீட் தேர்வு வேண்டாம் என்பதே அரசின் நிலைப்பாடு என்று கோவை விமான நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.
அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கக்கூடாது என்பதற்காகவே 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டது. மருத்துவப்படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேர் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு அரசு பள்ளி மாணவர்கள் 6 பேர் மட்டுமே மருத்துவ படிப்பில் சேர்ந்தனர் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.
சசிகலா விடுதலை எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்வர் பழனிச்சாமி கூறியுள்ளார்.