Tuesday, April 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல் மூட்டைகள்

அலட்சியத்தால் அழுகும் நிலையில் 6,000 நெல் மூட்டைகள்

அரக்கோணம் அருகே அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் 6 ஆயிரம் நெல் மூட்டைகளில் நாற்று முளைத்துள்ளதாக விவசாயிகளை குற்றம் சாட்டியுள்ளனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகேயுள்ள எஸ்.கொளத்தூர் கிராமத்தில் இரண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகிறது.

நிவர் புயலுக்கு முன்பே விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல் மூட்டைகளை நேரடி கொள்முதல் நிலையத்தில் கொண்டு வந்து சேர்த்தனர்.

ஆனால், அதிகாரிகளின்  அலட்சியம் காரணமாக தற்போது வரை நெல் கொள்முதல் செய்யப்படவில்லை.

இதனால் விவசாயிகள் கொண்டு வந்து வைத்த நெல் மூட்டைகளின் மேலே தற்போது நாற்று வளர்ந்துள்ளது.

நெல் முட்டைகள் கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து அழுகிப் போகும் நிலையில் உள்ளதால் விசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து நெல் முட்டைகள் இடைத்தரகர்கள் மூலமாக தான் கொள்முதல் செய்யப்படுவதாகவும் லஞ்சம் கொடுத்தால்தான் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்ப்படுவதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையங்களில் மெத்தனமாக செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடு்த்துள்ளனர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments