Monday, October 2, 2023
Home தமிழகம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு - உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்...

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிமாவட்ட போலீசாரை நியமிக்க கோரிய வழக்கு – உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையைச் சேர்ந்த அசோக்குமார் உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள், காவல் துறை அதிகாரிகள் அதே மாவட்டதில் பணிபுரிய கூடாது என ஒரு நபர் ஆணையம் பரிந்துரையின் படி, தமிழக அரசு கடந்த 2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பியிருந்தார்.

2000 ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை நடைமுறை படுத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் N.கிருபாகரன், B.புகழேந்தி அமர்வு கேள்வி எழுப்பியுள்ளனர்.

குமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் ஏன் தற்போது வரை பதட்டமான சூழல் உள்ளது? தமிழக உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை டிசம்பர் 18 ம் தேதி ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

- Advertisment -

Most Popular

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது – சட்ட ஆணையம்

போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் சம்மதம் தெரிவிக்கும் வயதை 18ல் இருந்து 16 ஆக குறைக்கக்கூடாது என்று ஒன்றிய அரசுக்கு சட்ட ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்தியாவில் பாலியல் சம்மதம் தெரிவிக்கும்...

சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம்

நிலவின் தென் துருவத்தில் இருக்கும் சந்திரயான் 3 விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவரை எழுப்பும் பணி தீவிரம். இன்றுடன் நிலவில் சூரியன் மறைய தொடங்க இருப்பதால் லேண்டர், ரோவரை எழுப்ப...

சென்னை – சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகை ₹10 ஆயிரம்

சென்னையில் சாலையில் சுற்றித் திரியும் மாடுகளுக்கான அபராத தொகையை ₹10 ஆயிரம் வரை உயர்த்த தீர்மானம். சென்னையில் மேயர் பிரியா தலைமையிலான மாநகரட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாடுகளின் உரிமையாளர்களிடம் போதிய ஒத்துழைப்பு இல்லாத...

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

Recent Comments