பிரதமர் மோடி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிறப்பு விமானத்தில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்தவர்களின் விவரங்கள், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோரப்பட்டது.
இந்த விவரங்களை கோரி, இந்திய விமானப்படைக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
தகவல் தர முடியாது என விமானப்படை நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
விசாரணையில், இந்த விவரங்கள் பிரதமரின் பாதுகாப்பு தொடர்பானது என்றும் எஸ்.பி.ஜி வீரர்களின் பட்டியல் ரகசியமானது என்றும் வாதிட்ட விமானப்படை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமரின் பயண விவரம் வராது என்றும் தெரிவித்தது.
எஸ்.பி.ஜி. வீரர்கள் பற்றிய தகவல்கள் வேண்டாம் என்ற மனுதாரர் தரப்பு, மற்ற விவரங்களை தெரிவிக்க தடையில்லை என கோரியது.
இதுதொடர்பாக பதிலளிக்க கோரிய நீதிமன்றம், மத்திய தகவல் ஆணைய உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.