தெலங்கானா மாநிலத்தில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நடுத்தெருவில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
எம்.ஐ.எம். என்ற கட்சியின் ஆதிலாபாத் மாவட்டத் தலைவரும், முன்னாள் நகராட்சி துணைத் தலைவருமான ஃபாரூக் அகமது மற்றும் அவரது உறவினர்கள் பல ஆண்டுகளாக அந்தக் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தனர்.
இந்நிலையில் உறவினர் குடும்பத்தினர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆளும் டி.ஆர்.எஸ் கட்சியில் இணைந்ததால் இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் பாரூக் அகமது தான் உரிமம் பெற்று வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டும் கத்தியைக் கொண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் ஜமீர், மோத்தேசன், மன்னன் ஆகியோர் காயமடைந்தனர்.