மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரியவருகிறது. கல்முனை – மட்டக்களப்பு நெடுஞ்சாலை வீதியும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக பெய்து வரும் இடியுடன் கூடிய கடும் மழை காரணமாக மாவட்டத்தின் பல தாழ்நிலப்பகுதிகள் வெள்ளநீரில் மூழ்கியுள்ளன.
இவ்வாறு வீதிகளில் காணப்படும் வெள்ளநீரை வெளியேற்றும் செயற்பாடுகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகிறது. மேலும், பொதுமக்களின் குடிசைகளிலும்,வீடுகளிலும், காணிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதுடன் வெள்ள அனர்த்தம் சம்பந்தமாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பாதிக்கப்பட்டவர்களின் இடங்களையும், பிரதேசங்களையும் பார்வையிட்டு வருகின்றார்கள்.