Tuesday, April 23, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10,12ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

மாணவ-மாணவிகளுக்கு வெப்ப பரிசோதனை செய்யவும், வைட்டமின் மாத்திரைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் கடந்த 10 மாதமாக மூடப்பட்டுள்ள நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் நலன் கருதி இன்று முதல் தமிழகத்தில் பள்ளிகளை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து 12 ஆயிரம் பள்ளிகளில் படிக்கும் 15 லட்சம் மாணவ-மாணவிகள் இன்று முதல் பள்ளிக்கு வர உள்ளனர்.

பள்ளிகள் இன்று திறக்கப்படுவதை முன்னிட்டு வகுப்பறைகள் தூய்மை செய்யப்பட்டுள்ளன. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளன.

மாணவ-மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்ய கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 

பெற்றோரின் எழுத்துப்பூர்வ இசைவு படிவத்துடன் வரும் மாணவ – மாணவிகளை மட்டுமே ஆசிரியர்கள் வகுப்பில் அனுமதிக்க வேண்டும், பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்ட உடன் ஆசிரியர்கள் நேரடியாக கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாணவ-மாணவிகளை உளவியல் ரீதியாக கற்றல் சூழ்நிலைகளுக்கு தயார் படுத்த வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments