குடியாத்தத்தை அடுத்த கே.வி. குப்பம் கீழ்விலாச்சூர் முருகன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார், சென்னை பூந்தமல்லியில் மத்திய பாதுகாப்புப்படை காவலராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு திருமணமாகி ஜெயந்தி (வயது 29) என்ற மனைவியும், நந்திதா (4) என்ற மகளும், 7 வயதில் மகனும் உள்ளனர். அவர், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி 3 நாட்களுக்கு முன்பு புதுமனை புகுவிழா நடத்தினார். அதன் பிறகு அவர்கள் புதிய வீட்டில் குடியேறி வசித்து வந்தனர்.
ஜெயந்தி, தனது மகள் நந்திதாவுடன் விரிஞ்சிபுரம்-கே.வி.குப்பம் ரெயில் நிலையங்களுக்கு இடையே நடந்து வந்து ஓரிடத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அந்த நேரத்தில் காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டையை நோக்கி சென்ற சரக்கு ெரயிலில் அடிபட்டு உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.