Tuesday, March 28, 2023
Home இந்தியா கட்சியில் சேர்ந்த 10 நாட்களில் முதல்வர் வேட்பாளர் - ஸ்ரீதரனை களமிறக்கும் பா.ஜ.க

கட்சியில் சேர்ந்த 10 நாட்களில் முதல்வர் வேட்பாளர் – ஸ்ரீதரனை களமிறக்கும் பா.ஜ.க

இந்தியாவின் பிரபல பொறியியல் வல்லுநர் ஸ்ரீதரன். டெல்லியில் மெட்ரோ திட்டத்திற்குத் தலைமை வகித்தவர். மேலும் கொச்சி, லக்னோ ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மெட்ரோவிற்கு ஆலோசகராகப் பணியாற்றியவர். இவ்வாறு மெட்ரோ திட்டங்களில் திறம்பட செயலாற்றியதால், இவர் “மெட்ரோ மனிதன்” என அழைக்கப்படுகிறார். 1964 ஆம் ஆண்டு, புயலால் சேதமடைந்த பாம்பன் பாலத்தைச் சீரமைத்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் கடந்த பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, அதிகாரப்பூர்வமாக பாஜகவில் இணைந்தார். இந்தநிலையில், கேரளாவில் ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஸ்ரீதரன் கட்சியில் சேரும்போதே அவர் முதல்வர் வேட்பாளராக களமிறங்கலாம் என தகவல்கள் வெளியாகின. அதுபோலவே அவர் தற்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த அறிவிப்பினை மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் வெளியிட்டுள்ளார். ஸ்ரீதரன் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்து 10 நாட்கள் கூட முடிவடையாத நிலையில், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் மும்பை அணி சாம்பியன் பட்டம்

மும்பை மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள்...

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது.

சென்னை சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா ஆளுநர் மாளிகைக்கு இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. நிறைவேற்றப்பட்ட மசோதா சட்டப்பேரவை செயலகத்தில் இருந்து சட்டத்துறைக்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டத்துறை மூலம் ஆன்லைன் ரம்மி...

ராகுல் காந்தி அவர்களை நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது ஜனநாயகப் படுகொலை – வைகோ கண்டனம்

காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல்காந்தி அவர்களை, நாடாளுமன்ற தகுதி நீக்கம் செய்தது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலையாகும். மோடிகள் ஊழல் செய்தார்கள் என்பதற்கு ஆதாரங்களோடு ராகுல்காந்தி அவர்கள் பேசியதற்கு, அவர் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாகப்...

ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கன்னியாக்குமரி வருகை

ஜனாதிபதி திரவுபதி முர்மு, கேரள மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், அவர் இன்று (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார்...

Recent Comments