கொல்கத்தா
மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படத்துடன் மத்திய அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் வைக்கப்பட்ட பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
8 கட்டங்களாக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது தேர்தல் விதி மீறல் என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டது. மேற்கு வங்கத்தில் பெட்ரோல் பங்குகளில் பிரதமர் மோடி புகைப்படம் அடங்கிய விளம்பர பதாகைகளை 72 மணி நேரத்திற்குள் அகற்ற உத்தரவு தேர்தல் ஆணையம் உதாரவிட்டுள்ளது.