Monday, September 25, 2023
Home இந்தியா குஜராத்தில் ஆன்லைன் வகுப்பால் நடந்த கொடூர சம்பவம்

குஜராத்தில் ஆன்லைன் வகுப்பால் நடந்த கொடூர சம்பவம்

பன்னிரெண்டாம் வகுப்பில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஜூம் ஆப் மூலம் ஆன்லைன் வகுப்புகள் நடந்து வந்துள்ளது.

அந்த ஆன் லைன் வகுப்பில் பில் 10 மாணவ மாணவிகள் தினமும் கலந்து கொண்டனர், அப்போது கடந்த வாரம் நடந்த ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் மார்பிங் செய்யப்பட்ட வீடியோக்கள் இணையத்தில் திடீரென வெளியானது. இதனால் அந்த மாணவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், இதை பற்றி அந்த ஆசிரயரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதை தொடர்ந்து, வகுப்பு தொடங்கியதும் யாரோ ஒருவர் மட்டும் ஜூம் ஆப்பை ஆன் செய்யாமல் அதை வீடியோவாக எடுத்து வேறு யாருக்கோ அனுப்புவதை கவனித்துள்ளனர்.

ஆனால், அந்த நபர் யாரென்று கண்டுபிடுப்பதற்குள் அவர் ஆன்லைனிலிருந்து போய் விட்டார். இதனால், பெரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அனைவிரும் அந்த மோசடி பற்றி பள்ளி நிர்வாகத்திடம் கூறினர்.

இதனையடுத்து, பள்ளி நிர்வாகம் உடனே ஆன்லைன் வகுப்பை ரத்து செய்தது. இதை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து சைபர் க்ரைம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆன்லைன் வகுப்பில் பங்கேற்ற மாணவர்களின் வீடியோவை டார்க் வெப் சைட்டுக்கு விற்றுள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதே சம்பவம் அதே பள்ளியில் ஏழு மாதங்களுக்கு முன்பு நடந்தது, அப்போதும் ஆன்லைன் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிய மாநில முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

- Advertisment -

Most Popular

நாட்டை விட்டு வெளியேறுங்கள் – கனடாவில் இந்துக்களுக்கு மிரட்டல்

டொரான்டோ இந்தியா - கனடா உறவில் விரிசல் அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு சமூகவலைதளங்களில் வீடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது. அதில், கனடாவில் வசிக்கும் இந்துக்களை நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டல் விடுக்கும் காட்சிகள்...

நீட் தகுதித் தேர்வு என்பது மோசடி – வைகோ அறிக்கை

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே...

இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு

சுனாமி போன்ற மக்களின் அன்பை எங்களால் சமாளிக்க முடியவில்லை. வெளியில் என்ன நடந்தது என்பது, உள்ளே இருந்த எங்களுக்கு தெரியவில்லை. இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்பதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவிப்பு.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை – முதலமைச்சர் ஸ்டாலின்

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மகளிர் உரிமைத் தொகை கிடைக்காதவர்களுக்கு உரிய காரணங்களை...

Recent Comments