மத்தியில் ஆளும் பாஜக அரசின் விவசாய சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சியை கைவிடக் கோரியும் இந்தியா முழுவதும் அனைத்து கட்சி சார்பில் மாபெரும் பந்த் இன்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு விவசாயிகள் சங்கங்கள் மற்றும் திமுக, காங்கிரஸ், மதிமுக, ம.நீ.ம உள்ளிட்ட கட்சிகள் சார்பில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் குமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், திமுக மாவட்ட செயலாளர்கள் வெற்றிவேல் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அந்தோணி, மோகன், இளங்கோ உட்பட 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் பின்னர் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.
எமது நிருபர்
நாஞ்சில் அற்புதம்.