Wednesday, May 29, 2024
spot_imgspot_imgspot_imgspot_img
Homeதமிழகம்வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

வெளிநாடு வாழ் தமிழர்களின் நலன் காக்க “புலம்பெயர் தமிழர் நல வாரியம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. அவர்கள் மீது அன்பு செலுத்துவது மட்டுமல்ல அரவணைப்பதும் பாதுகாப்பதும் தாய்த்தமிழ்நாட்டின் கடமையாகும்.

புலம்பெயர் தமிழர் நலநிதி என மாநில அரசின் ரூ.5 கோடி முன்பணத்தைக் கொண்டு நலவாரியம் உருவாக்கப்படும்.

மூலதனச் செலவினமாக ரூ.1.40 கோடி, தொடர் செலவினமாக நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக ரூ.3 கோடி ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்.

புலம்பெயர் தமிழர் குறித்த தரவு தளம் ஏற்படுத்தப்படும். இவ்வாரியத்தில் பதிவு செய்பவர்களுக்கு விபத்து, ஆயுள் காப்பீடு திட்டம் மற்றும் மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டையுடன் வழங்கப்படும்.

வெளிநாட்டிற்குச் செல்லும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி, திருமண உதவித் தொகை வழங்கப்படும்.

வெளிநாடு செல்பவர்களுக்கு புத்தாக்க பயிற்சியானது இராமநாதபுரம், புதுக்கோட்டை, குமரி, தஞ்சாவூர், பெரம்பலூர், சிவகங்கை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் நடத்தப்படும்.

புலம்பெயர் தமிழர் நலநிதிக்காக ரூ. 6.40 கோடி, நலத்திட்டங்களுக்காக ரூ.8.10 கோடி என மொத்தம் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments