பாராலிம்பிக் போட்டிகள், ஃபிடே உலக சதுரங்க ஆன்லைன் ஒலிம்பியாடு போட்டிகள் மற்றும் பல்வேறு சதுரங்க போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள்,
வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் 15 பேருக்கு ஊக்கத்தொகையா ரூ.3.98 கோடிக்கான காசோலைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.
விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் மற்றும் விளையாட்டுத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.