7.5% இடஒதுக்கீட்டின் கீழ் சேரும் மாணவர்களிடம் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று தொழில்நுட்ப கல்லூரி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகளுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஏ.ஐ.சி.டி.இ. வழங்கிய அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்வி கட்டணம் வசூலித்து இருந்தால் பொறியியல் கல்லூரிகள் உடனே திருப்பி வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.