கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பூட்டை அணைகட்டில் மீன் பிடிக்க சென்று ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 10 பேரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சங்கராபுரம் வட்டம், பூட்டை கிராமத்தை சேர்ந்த 10 பேர் நேற்று பூட்டை அணைக்கட்டு பகுதிக்கு மீன் பிடிக்க சென்றனர். மீன் பிடித்து கொண்டிருந்தபோது கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், மீன் பிடிக்க சென்றவர்கள் தண்ணீரில் சிக்கி வெளியே வரமுடியாமல் தவித்தனர்.
தகவலறிந்த சங்கராபுரம் போலீசார் மற்றும் தீயணைப்புவீரர்கள்சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் சிக்கிய 10 பேரையும் கயிற்றின் முலம் பாதுகாப்பாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.