தமிழகத்தில் மின்வெட்டு தொடர்பாக பேரவையில் அதிமுக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது.
சட்டப்பேரவையில் மின்வெட்டு குறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தினமும் 17 ஆயிரத்து 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும் நிலையில் 13 ஆயிரம் மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது என கூறினார். கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில் தேவையான நிலக்கரி கையிருப்பில் இல்லை என அவர் புகார் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் வராததால்தான் சில இடங்களில் மின் வெட்டு ஏற்பட்டது என்று தெரிவித்தார். மின் பற்றக்குறையை சமாளிக்க 3ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தனியாரிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அமைச்சரின் பதிலில் திருப்தி அடையாத அதிமுகவினர் அவையிலிருந்து வெளிநடப்புச் செய்தனர்.
மின்சாரப் பராமரிப்பில் அரசுக்குப் போதிய திட்டமிடல் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.